தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் காஞ்சிபுரத்தில் உள்ள அறிஞர் அண்ணா இல்லத்திற்குச் சென்று பார்வையிட்டு அறிஞர் அண்ணா சிலைக்கு மாைல அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன்: தி.மு.க., திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள்
சட்டமன்ற உறுப்பினர்கள் சி.வி.எம்.பி. எழிலரசன், க. சுந்தர் மற்றும் தி.மு.க. பொறுப்பாளர்கள் தமிழர் தலைவருக்குப் பொன்னாடை அணிவித்து புத்தகங்களை வழங்கி அன்போடு வரவேற்றனர்
அறிஞர் அண்ணா இல்ல வாயிலில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுடன் கழகப் பொறுப்பாளர்கள் உள்ளனர்.
காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா நினைவு நாள் கூட்டத்திற்கு செல்லும் வழியில் தாம்பரம் பகுதியில் ப.முத்தையன் தலைமையில் திராவிடர் கழகம், முஸ்லிம் அமைப்பினர் தமிழர் தலைவருக்குப் பயனாடை அணிவித்து வரவேற்றனர். வாலாஜாபாத் பகுதியில் அ.வெ. முரளி தலைமையில் கழக ஒருங்கிணைப்பாளர்கள் பன்னீர்செல்வம், உரத்தநாடு இரா. குணசேகரன், ஊமை ஜெயராமன் மற்றும் தோழர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர்.
காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா இல்லத்தில் திராவிடர் கழகத் தோழர்கள், தி.மு.க. தோழர்கள் அறிஞர் அண்ணா இல்ல பொறுப்பாளர்கள் தமிழர் தலைவருக்குப் பயனாடை அணிவித்தும், புத்தகங்களை வழங்கியும் வரவேற்றனர்.