ஈராயிரம் ஆண்டுகளாக உரிமைகளை மறுத்து விட்டு, ஒரு தலைமுறைக்கு கல்வி கொடுத்துவிட்டு, ‘‘சமமாக போட்டிக்கு வா‘‘ என்று அழைப்பது மிகவும் கொடு மையான சமூக அநீதி ஆகும் என்றார் அமெரிக்க கருப்பினப் பெண் எழுத்தாளர்.
ஜெய்ப்பூரில் நடந்துவரும் பன்னாட்டு இலக்கியத் திருவிழாவில், அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற கருப்பினப் பெண் எழுத்தாளர், ‘‘இந்தியாவில் நடக்கும் சமூக அநீதிகள் குறித்து எழுத்துகளில் அதிகம் பேசப்படுவதில்லை‘‘ என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் பேசும்போது, ‘‘பல ஆயிரம் ஆண்டு களில் பல தலைமுறையினரின் உழைப்பைச் சுரண்டி, வேலைவாய்ப்புகளைப் பறித்து, கல்வியை மறுத்து அநீதியை இழைத்துவிட்டு, ஒரு தலைமுறைக்கு வேலை யையும், கல்வியையும் கொடுத்துவிட்டு, ‘‘அதற்கும் இதற்கும் சரியாகப் போய்விட்டது; இனி சலுகைகள் தேவையில்லை அனைவரும் சமமாகப் போட்டியிட வேண்டும், இட ஒதுக்கீடு தேவையில்லை’’ என்று பேசுவதுதான் உலகின் ஆகபெரும் சமூக அநீதி ஆகும்’’ என்று புகழ்பெற்ற அமெரிக்க கருப்பின எழுத்தாளர் ஜினோ ஆலூ தனது சிறப்புரையில் கூறியுள்ளார்.