சென்னை, பிப்.3 அறிஞர் அண்ணா அவர்களின் 56ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (3.2.2025) காலை 10 மணியளவில் சென்னை கடற்கரை சாலையில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா அவர்களின் நினை விடத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், பொருளாளர் வீ. குமரேசன், செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ. வீரமர்த்தினி, துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில இளைஞரணி துணை செயலாளர் சோ. சுரேஷ், சி. வெற்றிச்செல்வி உள்ளிட்டோர் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வில் மேலும் பங்கேற்று மரியாதை செலுத்தியோர்:
தென் சென்னை மாவட்ட தலைவர் இரா. வில்வநாதன், திருவொற்றியூர் மாவட்ட தலைவர் வெ.மு. மோகன், சோழிங்க நல்லூர் மாவட்ட தலைவர் வே. பாண்டு, வடசென்ைன மாவட்ட செயலாளர் சு. அன்புச்செல்வன், மயிலை சேதுராமன், கு. நா.ராமண்ணா, கோவீ. ராகவன், பூவை. தமிழ்செல்வன், உடுமலை வடிவேல், மயிலை அன்பு, மு. பவானி, ரா. அருள், மு.இரா. மாணிக்கம், மா. சந்தீப்குமார், மா. பூவரசன், வடசென்னை மாவட்ட துணைத் தலைவர் நா. பார்த்திபன், மரகதமணி, கொடுங்கையூர் தங்க. தனலட்சுமி, வெற்றி வீரன், தாம்பரம் மோகன்ராஜ், யுகேஷ், க.கலைமணி மற்றும் தோழர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.