முதுகு வலியினால் ஏற்படும் பாதிப்புகளும், தவிர்க்கும் வழிமுறைகளும்!

viduthalai
3 Min Read

அ.தி.செந்தில்குமார்
விரிவுரையாளர்,
பிசியோதெரபி மருத்துவர்,
குமாரபாளையம்

தமிழ்நாடு

உழைப்பும், உடற்பயிற்சியும் குறைந்துவிட்ட காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்தியாவில் சுமாராக எட்டு கோடி பேர் முதுகு வலியால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. உலக சுகாதார நிறுவன அறிக்கையில் இந்தியாவில் சுமார் 10 பேரில் நான்கு பேருக்கு முதுகு வலி இருப்பதாக கூறப்படுகிறது.

கணிப்பொறியைப் பயன்படுத்துவது அதிகமாகி விட்ட காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அலுவலகங்களில் பணிபுரியும் பெரும்பாலோனார் கணிப்பொறி உபயோகிப்பது கட்டாயமாகிவிட்டது. நமது முதுகுப் பகுதியில் கழுத்தில் இருந்து முதுகு பகுதி வரை 33 எலும்புகள் உள்ளன.

முதுகுப் பகுதியில் அய்ந்து எலும்பும், கழுத்துப் பகுதியில் ஏழு எலும்புகளும் உள்ளன. இந்த எலும்புகளுக்கு இடையில் உள்ள குறுகிய பாதையின் வழியாக நமது தண்டுவடம் மூளைப்பகுதியோடு இணைக்கப்பட்டுள்ளது.

அதனை தண்டுவடம் என்று கூறுவர் தண்டுவடத்திற்கும் மூளைக்கும் உள்ள முக்கியமான நரம்புகளும் நமது தொடு உணர்ச்சி மூளையின் மூலம் தெரியப்படுத்துகிறது. முதுகெலும்புகளுக்கு இடையே தொடு உணர்வு மற்றும் இயக்கத்தை கொடுக்கும் நரம்புகள் பாதுகாப்பாக பயணிக்கின்றன. நரம்புகள் எலும்புகளுக்கிடையே 23 இடங்களில் ஜெல் போன்ற அதாவது மிக மிருதுவான பஞ்சு போன்ற பகுதி அமைந்துள்ளன.

இதனை ஆங்கிலத்தில் ‘வெர்ட்ப்ரல் டிஸ்க்’ என்று கூறுவார்கள். கழுத்தில் உள்ள எலும்புகளுக்கிடையே மற்றும் முதுகில் உள்ள அய்ந்து எலும்புகளுக்கும் இடையே உள்ள இந்த டிஸ்க் போன்ற பகுதி பல்வேறு காரணங்களால் பிதுங்கி வெளியே வந்து நரம்புகளை அழுத்தக்கூடும்.
சுமாராக, அய்ம்பதிலிருந்து 60 வயது உள்ளவர்களை அதிகமாக தாக்கிய முதுகு வலி கடந்த 20 ஆண்டுகளில் ஏற்பட்ட தொழில் புரட்சியினாலும் அதனால் ஏற்பட்ட வேலைப்பளு, அதிக நேரம் கைப்பேசி உபயோகித்தால் போன்ற காரணங்களால் 20 வயதிலிருந்தே முதுகு வலி நம்மை பாதிக்கிறது.

தமிழ்நாடு

முதுகு வலியினால் ஏற்படும்
பொதுவான பாதிப்புகள்
1. முதலாவதாக செயல் திறன் பாதிக்கப்படுகிறது
2. செய்யும் வேலையில் நாட்டம் குறைவு
3. செய்யும் வேலையை தொடர்ந்து செய்ய முடியாத நிலை
4. சம்பாதிக்கும் திறன் பாதிப்பு
5. பொருளாதார சூழ்நிலை பாதிப்பு
6. குடும்ப வறுமை
முதுகு வலி ஏற்பட காரணங்கள்

1. கடுமையான எடையை தூக்குதல்
2. இரண்டு சக்கர வாகனம் அல்லது நான்கு சக்கர வாகனத்தில் மிக நீண்ட தூரம் பயணிப்பது.
3. வேலை பளுவின் காரணமாக ஒரு நாளைக்கு
20லிருந்து 50 கிலோமீட்டர் வரை பயணிப்பது.

4. இடைவெளி இல்லாமல் நீண்ட நேரம் கணிப் பொறியின் முன் அமர்ந்து வேலை செய்வது.

முதுகு வலியை தவிர்க்கும் வழிமுறைகள்

நாம் உறங்கும் படுக்கையை சரியாக அமைப்பது – மிருதுத் தன்மை கண்டிப்பாக தேவை. ஆனால், மிக அதிகமான மிருதுத் தன்மை உடம்பில் முதுகில் இருக்கும் வளைவுத் தன்மையை குறைத்து தசைகளின் அழுத்தத்தை அதிகமாக்கும் பொழுது முதுகு வலி ஏற்படலாம். அதனால் மிருதுத் தன்மை மிக அதிகமான போம் மேட்டரஸ் போன்ற படுக்கை விரிப்புகளை உபயோகிக்கும் பொழுது மிகுந்த கவனமாக இருக்கவும்.
கணிப்பொறியின் முன் அதிக வேலை செய்பவர்கள் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை இருக்கையில் இருந்து எழுந்து சிறிது நேரம் தூரம் நடந்து விட்டு மீண்டும் வந்து இருக்கையில் அமரலாம்.

கழுத்து, முதுகுப் பகுதிகளில் உள்ள தசைகளை ஸ்ட்ரெட்ச் என்று கூறுவார்கள். அருகில் பிரசுரிக்கப்பட்டு இருக்கும் படங்களைப் போல சில பயிற்சிகளை செய்து கொண்டு மீண்டும் அமர்ந்து வேலை செய்யலாம்.

இரு சக்கர வாகனம் நான்கு சக்கர வாகனத்தில் நீண்ட தூரம் பயணிக்கும் பொழுது சுமார் 20 கிலோ மீட்டர் அல்லது 25 கிலோமீட்டர் வரும் வரை வாகனத்தை நிறுத்திவிட்டு வாகனத்தில் இருந்து இறங்கி சிறிது தூரம் நடந்து விட்டு மீண்டும் பயணம் செய்யலாம்.
உங்கள் உடல் எடையை விட மூன்று பங்கு அதிகமான எடையை நீங்கள் தூக்கும் பொழுது அருகிலுள்ள நண்பர்களின் இரண்டு அல்லது மூன்று நபர்கள் உதவியை பெற்று அந்த பொருளை நகர்த்துவது சாலச் சிறந்தது. இதுபோன்ற சிறு சிறு உடல் மாற்றங்களை நீங்கள் செய்யும் பொழுது முதுகு வலியால் ஏற்படும் கடுமையான பாதிப்புகளை நீங்கள் கண்டிப்பாக தவிர்க்க முடியும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *