‘நீட்’ தேர்வு ‘தகுதிவாய்ந்த’ மருத்துவர்களை மட்டுமே உருவாக்கும் என்று நீட்டி முழங்கும் பாஜகவினருக்கு
மகாராட்டிரா மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில், அங்கு படிப்பவர்களுக்கான கட்டண விவரத்தை அங்குள்ள முன்னணி நாளிதழான ‘நவபாரத் டைம்ஸ்’-இன் முதல் பக்கத்தில் விளம் பரமாகவே கொடுத்துள்ளனர்.
இவ்வளவு பெரிய தொகைகளைக் கட்டிப் படிப்பவர்கள் எப்படி மக்கள் சேவை செய்ய வருவார்கள்? ஏற்கெனவே ரூ.12 முதல் ரூ.20 லட்சம் வரை செலவு செய்து நீட் தேர்வு பயிற்சி மய்யங்களில் படித்துத் தேர்ச்சிப் பெறுகிறார்கள். அப்படி தேர்ச்சி பெற்று மதிப்பெண் குறைந்தால் ரூ.30 லட்சம் முதல் ஒரு கோடி ருபாய் வரை மருத்துவக் கல்லூரிக் கட்டணம் அதுவும் முழுத்தொகையாக கொடுக்க வேண்டுமாம், முன்பணம் அல்லது பகுதிப் பணம் எல்லாம் வாங்கமாட்டார்களாம்.