கடந்த அதிமுக ஆட்சியில் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பி.வி.பாரதியின் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட பல பேருந்து நிறுத்தங்களில் பெரிய அளவில் பிள்ளையார் படம் பொறிக்கப்பட்ட டைல்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.
பல்வேறு மதத்தினராலும் பயன்படுத்தப்படும் பேருந்து நிறுத்தங்களில் ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டும் பிரதிபலிக்கும் மதச் சின்னங்களை, கடவுளர் படங்களை, அரசு நிதியில் கட்டப்படும் கட்டடங்களில் வைத்தது சரியா?
மற்ற மற்ற மதத்தினரும் இப்படி பொது இடங்களில் தங்கள் மதக்குறியீடுகளை வைக்க முற்பட்டால் அதன் விளைவு என்ன?
மதச்சார்பற்ற அரசு என்பதை கவனத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு கடந்த ஆட்சியில் நடந்த அவலங்களை அகற்ற முயல வேண்டும்.