ரூ.70 கோடியில் மேலும் 6 தோழி மகளிர் விடுதிகள் அமைக்க அரசு ஒப்பந்தம் கோரியுள்ளது. இதில், சென்னையில் 2 விடுதிகளும், கோவை, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், ராமநாதபுரம் மாவட்டங்களில் தலா ஒரு விடுதியும் அமையவுள்ளன. இதன் மூலம் 1,200 பெண்கள் பயனடைவார்கள் என அரசு தெரிவித்துள்ளது. கல்வி, பணிக்குச் செல்லும் பெண்கள் மலிவு விலையில் தங்கும் வகையில் ஏற்கனவே 11 விடுதிகளை அரசு திறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.