சென்னை, பிப். 2- தமிழ்நாட்டில் 31 அய்ஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு தலைமை செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டு உள்ளார். இதில் 9 மாவட்ட ஆட்சியர்களும் அடங்கும்.
இதுதொடர்பாக தலைமைச் செயலா ளர் முருகானந்தம் வெளியிட்டுள்ள உத்தரவின்படி, தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி ஆணையராக இன்னசன்ட் திவ்யா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் ஆட்சியராக பிரதாப், திருவாரூர் ஆட்சியராக சிவசவுந்தரவள்ளி, சேலம் பட்டு வளர்ப்பு இயக்குநராக சாந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கால்நடை பராமரிப்புத் துறை இயக்கு நராக கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். திருவள்ளூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, விழுப்புரம், தரும புரி மாவட்ட ஆட்சியர்கள் மாற்றப்பட்டு உள்ளனர்.
அந்த வகையில், தருமபுரி மாவட்ட ஆட்சியராக அய்ஏஎஸ் அதிகாரி சதீஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக சரவணன், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக தினேஷ் குமார், விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக ஷேக் அப்துல் ரஹ்மான் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக தர்ப்பகராஜ், திருப்பத்தூர் ஆட்சியராக மோகனசந்திரன், நெல்லை மாவட்ட ஆட்சியராக சுகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் ஆட்சியராக இருந்த பழனி, அறநிலையத் துறை கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நகராட்சி நிர்வாக இணை ஆணையராக லலித் ஆதித்யா நீலம் நியமிக்கப்பட்டுள்ளார்.
தருமபுரி மாவட்ட ஆட்சியராக சதீஷ், தொழிலாளர் நல ஆணையராக ராமன் நியமனம், தமிழ்நாடு அரசின் பொதுத் துறை இணை ஆணையராக சரயு, தமிழ்நாடு அரசின் மின் ஆளுமை முகமையின் இணைய தலைமை செயல் அலுவலர் ஸ்ருதன்ஜய் நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சிதம்பரம் துணை ஆட்சியராக கிஷண் குமார், எம்டிசி மேலாண் இயக்குநராக பிரபு சங்கர், வேளாண் மற்றும் உழவர் நலத்துறை ஆணையர் மற்றும் செயலாளராக தட்சிணா மூர்த்தி, வணிகவரி இணை ஆணையராக பூங்கொடி நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
சிறப்புத் திட்ட அமலாக்கத் துறை செயலராக பிரதீப் யாதவ், துணை முதலமைச்சர் உதயநிதியின் செயலர் பிரதீப் யாதவுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பெண்கள் வேலை வாய்ப்பு மற்றும் பாதுகாப்பு திட்ட இயக்குநராக ஆர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு சாலை மேம்பாட்டு கழகத் திட்ட இயக்குநராக பாஸ்கர பாண்டியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை – குமரி தொழில் வழித்தட திட்டத்தின் மேலாண் இயக்குநராக கூடுதல் பொறுப்பும் வகிக்கிறார்.
தமிழ்நாடு அரசின் வழிகாட்டுப் பிரிவு நிர்வாக இயக்குநராக தாரேல் அகமது நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு அரசின் வழிகாட்டுப் பிரிவு நிர்வாக இயக்குநராக தாரேஸ் அகமது நியமிக்கப்பட்டுள்ளார்.
தருமபுரி மாவட்ட ஆட்சியராக சதீஷ், பேரிடர் மேலாண்மை ஆணையராக தாமஸ் வைத்தியன், பொருளாதார மற்றும் புள்ளியியல் துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையராக ஜெயா, கூட்டுறவுத் துறை கூடுதல் பதிவாளராக அம்ரித், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சிறப்புச் செயலராக கணேஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை நேற்று (1.2.2025) தலைமைச் செயலகத்தில், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 9 மாவட்ட ஆட்சித் தலைவர்களான ஆர். சதீஷ், எஸ். சரவணன், எம். பிரதாப், சி. தினேஷ் குமார், எஸ். சேக் அப்துல் ரகுமான், கே. தர்பகராஜ், வி. மோகனசந்திரன். ஆர். சுகுமார், கே. சிவசவுந்தரவள்ளி ஆகியோர் சந்தித்து லாழ்த்துப் பெற்றனர். உடன் தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், பொதுத்துறை செயலாளர் ரீட்டா ஹரீஷ் தக்கர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர்.