மக்களிடையே, மாநிலங்களிடையே பாகுபாடு காட்டி, இந்திய ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் நிதிநிலை அறிக்கை! – விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டனம்

Viduthalai
1 Min Read

சென்னை, பிப். 2- மக்களிடையே, மாநிலங்களிடையே பாகுபாடு காட்டி இந்திய ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் நிதிநிலை அறிக்கை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அறிக்கை வருமாறு:
நேற்று (1.2.2025) அறிவிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையைத் தனது கூட்டணிக் கட்சிகளைத் திருப்தி செய்வதற்காகவே பாஜக அரசு பயன் படுத்தியுள்ளது. மற்ற மாநிலங்கள் வஞ்சிக்கப்படுவதால் இந்திய ஒருமைப்பாடே சீர்குலையும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. மோடி அரசின் ஓர்வஞ்சனைப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மை யாகக் கண்டிக்கிறோம்.

பீகார் பட்ஜெட்
பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறும் பீகார் மாநிலத்தில் தேசிய உணவுத் தொழில் நுட்ப நிறுவனம் (என்.அய்.எஃப்.டி) அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பீகாரில் விளையும் மக்கானா பயிரை மேம்படுத்துவதற்காக வாரியம் அமைக்கப்படும் என்று அறிவிப்பு செய்யப்பட்டிருக்கிறது. பீகாரில் கிரீன் ஃபீல்ட் விமான நிலையம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
பாட்னாவில் இருக்கும் அய்.அய்.டி விரிவுபடுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டுக்காக ஒரு அறிவிப்புகூட இல்லை. இது அப்பட்டமான ஓரவஞ்சனை ஆகும்.

தமிழ்நாடு புறக்கணிப்பு
பழங்குடி மக்களுக்குத் தாங்கள் ஆதரவாக இருப்பது போல இந்த அரசு பகல் வேடம் போடுகிறது. கடந்தாண்டு பட்ஜெட்டில் பழங்குடி யினர் நலத் துறைக்காக இந்த பட் ஜெட்டில் சமூக அடிப்படையில் எஸ்சி, எஸ்டி மக்களையும்; சிறு பான்மை மதங்களைச் சேர்ந்த மக்களையும் வஞ்சித்திருக்கிறார்கள். மாநிலங்களை எடுத்துக்கொண்டால் தமிழ்நாட்டை ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்திருக்கிறார்கள். இந்த அணுகுமுறை சமூக ரீதியில் ஏற்றத் தாழ்வை வலுப்படுத்துவதாகவும், மாநில உரிமைகளை மறுப்பதாகவும் இருக்கிறது. இது இந்திய ஒருமைப்பாட்டுக்கு ஊறுவிளைவிப்பதாக உள்ளது.
மொத்தத்தில், நிதி ஒதுக்காமல் வெற்று அறிவிப்புகளைச் செய்திருக்கும் இந்த பட்ஜெட், மக்களுக்கிடையேயும் மாநிலங்களுக்கிடையேயும் பாகுபாடுகளை உருவாக்கும் பிரிவினைவாதப் போக்கைக் கொண்டதாக உள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *