டெக்கான் கிரானிக்கல், சென்னை:
- அனைத்து ஆய்வு அறிக்கைகளிலும் தமிழ்நாட்டுக்கு பாராட்டு பத்திரம் வாசிக்கப்படுகிறது நிதிநிலை அறிக்கையில் மட்டும் தமிழ்நாடு முழுமையாக புறக்கணிக்கப்படுவது ஏன்? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
- பட்ஜெட்டில் ரூ.574 கோடி மட்டுமே ஒதுக்கிய நிலையில், 2021இல் நடத்தப்பட வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2025 ஆண்டிலும் எடுப்பதற் கான வாய்ப்புகள் இல்லை.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
- ‘ஏழைகள், வேலையின்மைக்கு துரோகம்’: புதிய யோசனைகள் இல்லை, அடிப்படை பிரச்சினைகளை தீர்க்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் கண்டனம்.
- ஒன்றிய பட்ஜெட் 2025 சிறப்பம்சங்கள்: வருமான வரியில் பெரிய வெட்டுக்கள் என்பது 2019ஆம் ஆண்டு அதன் கார்ப்பரேட் வரி குறைப்பு பலனளிக்கவில்லை என்பதை அரசாங்கம் ஏற்றுக் கொள்வதாகும். வரிசைமுறை மாற்றப்பட்டிருந்தால் – முதலில் அய்டி குறைப்பு, பின்னர் கார்ப்பரேட் வரி குறைப்பு – முடிவுகள் மிகவும் வித்தியாசமாக இருந்திருக்கும் என்கிறார் உதித் மிஸ்ரா.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
- உத்தரப்பிரதேசம் அயோத்தியில் இளம் தாழ்த்தப்பட்ட சமூகப் பெண் இறந்து கிடந்தார், பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினரும் சக கிராம மக்களும் இது ஒரு கூட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கு என்று சந்தேகித்தனர்.
தி டெலிகிராப்:
- 2025-2026 பட்ஜெட் சாதாரண மக்களுக்கும் இந்தியாவிற்கும் பேரழிவாக இருக்கும். திட்டங்களில் வெட்டுக்கள்; இளைஞர்கள், பெண்கள் மற்றும் விவசாயிகளுக்கு எதுவும் இல்லை; உற்பத்தி தேக்கநிலை; காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீடு; வரி குறைப்புகளின் நிகர விளைவு; இந்தியாவின் கடன் வளரும் என்கிறார் மேற்கு வங்க முதலமைச்சரின் நிதித்துறை சிறப்பு ஆலோசகர் அமித் மிஸ்ரா.
- வரவு செலவுத் திட்டம் 2025-2026 ‘விவசாயிகளுக்கு எதிரானது’, வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கோரிக்கை ஏற்கப்பட வில்லை: சம்யுக்தா கிசான் மோர்ச்சா கண்டனம்.
- மகாராஷ்டிராவில் நடத்தப்படும் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வு வினாத்தாள்கள் ரூ.40 லட்சத்திற்கு விற்பனை: பதிவு வேகமாக பரவும் நிலை யில் பந்தாராவில் 2 பேர் கைது. 280000 பேர் விண்ணப்பித்த நிலையில், தேர்வு இன்று நடைபெறு கிறது.
- டில்லி தேர்தலில் சீட் மறுப்பு; 7 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் பதவி விலகல்; பாஜகவில் சேர்ந்தனர்.
.– குடந்தை கருணா