புதுச்சேரி, ஜூலை 16 – புதுச்சேரி மாவட் டத் திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் புதுச்சேரி இராசா நகர் பெரியார் படிப்பகத்தில் 11.-7.-2023 அன்று மாலை நடை பெற் றது. மாவட்டத் தலைவர் வே.அன் பரசன் தலைமையில், காப்பாளர் இரா.சடகோபன் முன்னிலையில், மாவட்டச் செயலாளர் கி. அறிவழகன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
புதுச்சேரி மாநிலத் திராவிடர் கழகத் தலைவர் சிவ. வீரமணி தொடக்கவுரை நிகழ்த்தினார். திராவிடர் கழக ஒருங்கிணைப்பா ளர் உரத்தநாடு இரா.குணசேகரன் நோக்கவுரை நிகழ்த்தினார். கடந்த காலங்களில் நடைபெற்ற செயற் பாடுகள் பற்றி விளக்கி மேலும் சிறப்பாக செயல்பட வேண்டிய உத்திகள் பற்றி விரிவாக எடுத்துக் கூறினார்.
காப்பாளர் இரா.சடகோபன், மாவட்டத் துணைத் தலைவர் மு. குப்புசாமி, புதுச்சேரி நகராட்சி தலைவர். மு. ஆறுமுகம், புதுச்சேரி விடுதலை வாசகர் வட்டத் தலைவர் கோ.மு.தமிழ்ச்செல்வன், பெரியார் பெருந்தொண்டர் சா.கிருஷ்ண சாமி, கழக மேனாள் தலைவர் தெ. தியாகு, இராம. சேகர், செ.இளங் கோவன், இரா.ஆதிநாராயண், பகுத்தறிவாளர் கழகத் தலைவர் நெ.நடராசன், பகுத்தறிவாளர் கழக மாநிலத் துணைத் தலைவர் ஆடிட்டர் கு.இரஞ்சித்குமார், மாநில எழுத்தாளர் மன்ற துணைப் பொதுச்செயலாளர். வி.இளவரசி சங்கர், தொழிலாளரணி செயலா ளர் கே.குமார், எஸ்.முகேஷ், ஆ.சிவராசன், இளைஞரணித் தலை வர் தி.இராசா ஆகியோர்களின் கருத்துரைகளுக்குப் பின்னர் மாநி லத் தலைவர் சிவ.வீரமணி, மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.குண சேகரன் விளக்கவுரை வழங்கினார்.
ஒடிசா தொடர் வண்டி விபத்து, மணிப்பூர் மாநிலக் கலவரம் ஆகி யவற்றில் உயிர் நீத்த நூற்றுக்கணக்கான மக்களுக்கும், புதுச்சேரி கால் பந்தாட்டக் கழகத்தின் மேனாள் தலைவர் பெரியார் பெருந் தொண் டர் எழிலன் இராமகிருஷ்ணன் மறைவிற்கும் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
புதுச்சேரியில் எதிர் வரும் 23.07.2023 அன்று பகுத்தறிவாளர் கழகம் சார்பில் நடைபெறவுள்ள பெரியாரியல் பயிற்சிப் பட்டறை மிகவும் சிறப்பாக நடைபெற அனைத்து நிலைகளிலும் ஒத்து ழைப்பு நல்குவதெனவும், தமிழ் நாட்டில் வழங்குவது போன்று புதுச்சேரி அரசும் மருத்துவம், பொறியியல் மற்றும் செவிலியர் படிப்புகளில் அரசுப் பள்ளி மாண வர்களுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்க ஆவன செய்ய வேண்டும் எனவும், சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் அவசர கதியில் இந்தாண்டே செயல்படுத்துவதை தவிர்த்து படிப்படியாக செயல்படுத்த வேண் டும். இப்பாடத் திட்டத்தில் தமி ழைக் கட்டாயமாக்கி உடனடியாக அரசாணை வெளியிட வேண்டும் எனவும், திராவிடர் கழகத்தின் சார்பில் எதிர் வரும் செப்டம்பர் மாதம் 3ஆம் நாள் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை புதுச்சேரி வில் லியனூரில் சிறப்பாக நடத்தவும், மாலையில் மாபெரும் பொதுக்கூட் டம் தேரடித் தெருவில் நடத்துவ தெனவும் தீர்மானிக்கப்பட்டது. கடந்த 6.7.2023இல் நடைபெற்ற தலைமை செயற்குழு கூட்டத் தீர் மானங்களை புதுச்சேரி மாவட் டத்தில் நிறைவேற்றும் வகையில் புதிய அமைப்புகளை ஏற்படுத்தி பொறுப்புகள் வழங்கப்பட்டன.
அதன்படி, புதுச்சேரி நகராட்சி (1முதல் 17 வார்டுகள்) புதுச்சேரி வடக்கு தலைவர்: சா. கிருஷ்ணசாமி, செயலாளர்: கே.இராமன்.
புதுச்சேரி தெற்கு(18 முதல் 33வரை வார்டுகள்) தலைவர்: மு.ஆறுமுகம், செயலாளர்: களஞ்சியம் வெங்கடேசன்.
உழவர்கரை நகராட்சி (1 முதல் 21வரை வார்டுகள்) உழவர்கரை கிழக்கு தலைவர்: சு.துளசிராமன், செயலாளர்: கா.நா.முத்துவேல்.
உழவர்கரை நகராட்சி(22 முதல்43வரை) உழவர்கரை மேற்கு தலைவர்: சா.சந்திரசேகர், செயலா ளர்: வ.பன்னீர்செல்வம்.
அரியாங்குப்பம் கொம்யூன் தலைவர்: செ.இளங்கோவன், செய லாளர்: இரா.ஆதிநாராயணன்.
பாகூர் கொம்யூன் தலைவர்: இராம. சேகர், செயலாளர்: செ.க. பாட்ஷா,
வில்லியனூர் கொம்யூன் தலை வர்: கு.உலகநாதன், செயலாளர் இரா.சுந்தர்.
நெட்டப்பாக்கம் கொம்யூன் தலைவர்: தெ.தமிழ்நிலவன், செய லாளர்: தெ. குமார்.
மண்ணாடிப்பட்டு கொம்யூன் தலைவர்: கவிஞர்.இரா.வெற்றிவேல்.
விடுதலை வாசகர் வட்டச் செயலாளர்: ஆ.சிவராசன்.
புதியதாக நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்கள் தங்கள் பகுதி யில் “கொடி,செடி,படி” என்ற தமி ழர் தலைவர் அறிவித்த உளுந்தூர் பேட்டை வடிவ செயல்பாட்டை நிறைவேற்றும் வகையில் வாரம் ஒரு ஊரில் கழகக் கொடியேற்றி அருகில் மரச்செடிகள் நட்டு விடுதலை உண்மை இதழ்கள் படிக்க பரப்புரைகள் செய்வதெனத் தீர்மானிக்கப்பட்டது. நிறைவாக மாவட்டச் செயலாளர் கி.அறி வழகன் நன்றி கூறினார்.
முன்னதாக கழகக் காப்பாளர் இரா.சடகோபன் விடுதலை சந்தா தொகையை கழக மாநில ஒருங் கிணைப்பாளர் இரா.குணசேகர னிடம் வழங்கினார்.