சென்னை,பிப்.1- தமிழ்நாடு அரசு, டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி வழங்குகிறது.
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வண்ணை நகரில் பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது. விருப்பமுள்ளவர்கள் வரும் 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
இலவச பயிற்சி
இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை, கிண்டி தொழில்சார் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மய்யத்தில் இயங்கும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள கிராம நிர்வாக அலவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் பதவிகளுக்கான ஒருங்கிணைந்த TNPSC-GROUP IV தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் வண்ணை நகரில் அமைந்துள்ள அரசு வடசென்னை அய்.டி.அய் வளாகத்தில் துவங்கப்படவுள்ளது.
இப்பயிற்சி வகுப்பானது வார நாட்களில் (திங்கள் மற்றும் வெள்ளி வரை) நடைபெற உள்ளது. இத்தேர்விற்கான குறைந்தபட்ச கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு ஆகும். இப்பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பப்படிவ நகலுடன் தங்களது ஆதார் அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படத்துடன் வரும் 10ஆம் தேதிக்குள் சென்னை-32, கிண்டி, தொழில்சார் வேலைவவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மய்யத்தை நேரடியாக ஏதாவது ஒரு வேலை நாட்களில் அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், விவரங்களுக்கு [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம். வடசென்னையை சேர்ந்த தகுதிவாய்ந்த தேர்வர்கள் இப்பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறுமாறு சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே கேட்டுக்கொண்டுள்ளார்.
இதே போல அந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பாகவும் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்படவுள்ளது.