சென்னை, பிப்.1 போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி கோரி விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை 5 நாள்களிலிருந்து 10 நாள்களாக அதிகரித்து சட்டத்திருத்தம் செய்யவேண்டும், அனுமதி கோரும் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்ற காவல்துறை, விண்ணப்பங்கள் மீது ஆலோசித்து, 48 மணி நேரத்துக்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.