தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (31.1.2025) வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில், ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட தண்டையார்பேட்டையில் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் காகர்லா உஷா, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ. குமரகுருபரன். சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும முதன்மை செயல் அலுவலர் அ. சிவஞானம். மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தண்டையார்பேட்டை பேருந்து நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்

Leave a Comment