* சுதந்திரத்திற்குப் பிறகு முதல் முறையாக 1954இல் கும்பமேளா அலகாபாத்தில் (இப்போது பிரயாக்ராஜ் என பெயர் மாற்றப்பட்டுள்ளது) நடந்தது. அப்போது, பிப்ரவரி 3ஆம் தேதி மவுனி அமாவாசை தினத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கியும், ஆற்றில் மூழ்கியும் 800 பக்தர்கள் பலியாகினர்.
* 1986இல் அரித்துவாரில் கும்பமேளா நடந்த போது, அப்போதைய உபி முதலமைச்சர் வீர் பகதூர் சிங் மற்றும் பிற மாநில முதலமைச்சர்கள், எம்பிக்கள் புனித நீராட வந்ததால், சாமானிய பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 200 பேர் பலியாகினர்.
* 2003இல் மகாராட்டிராவின் நாசிக்கில் கும்பமேளா நடந்த போது கோதாவரி ஆற்றில் நீராட பக்தர்கள் குவிந்ததால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 10க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
* 2013இல் கும்பமேளா சமயத்தில் உபி அலகாபாத் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட பக்தர்கள் நெரிசலில் 42 பேர் பலியாகினர். 45 பேர் காயமடைந்தனர்.
மகா கும்பமேளாவில்
திருப்பதி தேவஸ்தான ஊழியரைக் காணவில்லை
உத்தர பிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில், திருமலை – திருப்பதி தேவஸ்தானம் சார்பில் மாதிரி ஏழுமலையான் கோயில் நிர்மாணிக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
ஆகம விதிகளின்படி பூஜைகளை நடத்த அர்ச்சகர்கள், ஊழியர்கள், அதிகாரிகள் என சுமார் 200 பேரை திருமலை திருப்பதி தேவஸ்தானம் பிரியாக்ராஜ் பகுதிக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்நிலையில் அங்கு பணியாற்றி வந்த சுப்பிரமணியம் என்ற ஊழியரை கடந்த புதன்கிழமை மாலை முதல் காணவில்லை என கூறப்படுகிறது. காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சுப்பிரமணியத்தை தேடி வருகின்றனர்.
மோடி பிரதமரான பின்பு தான்
சுதந்திரம் கிடைத்ததா? ராகுல்
மோடி பிரதமரான பின்பு தான் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்துள்ளதாக ஆர்.எஸ்.எஸ். நினைப்ப தாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். அதனால் தான் நமக்கு 1947இல் சுதந்திரம் கிடைக்கவில்லை என ஆர்.எஸ்.எஸ். தலைவர் பேசியதாக அவர் சாடியுள்ளார்.
காந்தியாரின் சிந்தனைகளையும், அம்பேத்கர் எழுதிய அரசமைப்பையும் தகர்ப்பதற்கு, பாஜக விற்கு மக்களவையில் 400 உறுப்பினர்கள் தேவைப் பட்டதாகவும், அதை மக்கள் முறியடித்ததாகவும் தெரிவித்துள்ளார்.