உலகளவில் புதிய கண்டுபிடிப்புகள் புரட்சியை ஏற்படுத்தி வருகின்றன. ஆனால் இங்கே அறிவியலையே போலியாக மாற்ற தலைமைப் பதவியில் அமர்ந்தவர் முதல் முனைப்போடு பரப்புரை செய்கின்றனர்.
மரத்தடியில் அமர்ந்திருந்த நியூட்டன், கீழே விழுந்த ஆப்பிளை கடவுள் பசியாற்ற கொடுத்தார் என்று நினைத்து சாப்பிட்டிருந்தால், கணித கணக்கீடுகள் மூலம் ஈர்ப்பு விசையை அறிய உலகம் நீண்ட காலம் காத்திருக்க வேண்டியிருந்திருக்கும்.
மரத்தடியில் புத்தர் அமர்ந்திருந்தார். மனிதர்களின் அனைத்து இன்னல்களுக்கான காரணத்தை ஒரே நாளில் தந்து விடவில்லை. நீண்ட ஆண்டுகளாக மக்களோடு பழகி மக்களோடு இருந்து அவர்களின் துண்பங்களுக்கு விடை என்ன என்று கண்டுபிடித்துக் கொடுத்தார்.
பின்னர் அவரது சீடர்கள் நூற்றுக்கணக்கான சர்வதேச பல்கலைக் கழகங்களைத் திறந்து, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மக்களுக்குக் கல்வி புகட்டினர்.
அவர் எக்காரணம் கொண்டும் மூடநம்பிக்கைக்கு இடம் கொடுக்க வில்லை. ஆகையால் தான் பவுத்தத்தை அறிவியல்பூர்வமாக எடுத்துகொண்ட கொரியா, சீனா, தைவான், ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் இன்று அனைத்து துறைகளிலும் முன்னேறி உள்ளன.
ஆனால், புத்தரைக் கடவுளாக பார்த்த நாடுகளான இலங்கையும், மயன்மாரும் இன்றும் மதச் சிக்கல்களில் விழுந்து எழமுடியாமல் தவிக்கின்றன.
ஆனால், புத்தர் பிறந்த இந்த மண்ணில் பள்ளிக் கல்வியில் பகவத் கீதை, ராமாயணம், மகாபாரதம் சேர்க்கப்படுகிறது. பள்ளி மாணவர்களிடம் அறிவியல் சிந்தனையை எப்படி வளர்ப்பது என்ற பாடத்திட்டம் வட இந்தியாவில் கிட்டத்தட்ட நீக்கப்பட்டே விட்டது. பகவத் கீதையை சேர்க்கும் கூட்டம் எப்படி அறிவியலைச் சேர்க்கும்.
புராணக் கதைகளுக்கும் வரலாற்றுக்கும் என்ன வேறுபாடு என்பதை அறிய பாடத்திட்டம் சேர்க்கப்படும் என்று கேள்விப்பட்ட துண்டா?
மேலை நாடுகளில் எந்த நிறுவனத்தின் நபராக இருந்தாலும், அறிவியலுக்கு புறம்பான பேச்சு அல்லது ஜாதிப் பாகுபாட்டை கடைப்பிடிப்பது, கண்டுபிடிக்கப் பட்டால் அவர் அந்த நிறுவனத்திலிருந்து வெளியேற்றப் படுவார்.
ஏனெனில், நாடு அறிவியலால் முன்னேறி வருகிறது. மூடநம்பிக்கை கொண்ட, அறிவியலுக்கு எதிரான மக்கள் நிறுவனங்களில் அமர்ந்து நாட்டின் சூழலை கெடுத்து, இந்த நாட்டில் அறிவியல் முன்னேற்றத்தைத் தடுக்கிறார்கள்.
அனைத்து நிறுவனங்களிலும் இது கடுமையாக அமல்படுத்தப்பட வேண்டும். ஆனால் இங்கே அய்.அய்.டி. இயக்குநரே மாட்டு மூத்திரம் குடித்தால் காய்ச்சல் சரியாகும் என்கிறார்.
பாகிஸ்தானும், நேபாளும் பங்களாதேசும், சிறீலங்காவும், சீனாவோடு சேர்ந்து செயற்கை தொழில் நுட்பத்திற்கான ஆயத்தப் பணிகளைத் துவங்கி தங்கள் நாட்டின் சிறுதொழில் வளர்ச்சி குறித்து முனைப்போடு பணியாற்றி வருகின்றன. ஆனால் இங்கே கும்பமேளாவிற்கு எத்தனை பேர் வந்தார்கள் என்று செயற்கை தொழில் நுட்பத்தின் மூலம் எண்ணிக்கொண்டு இருக்கிறோம். உலகளவில் புதிய கண்டுபிடிப்புகள் புரட்சியை ஏற்படுத்தி வருகின்றன. ஆனால் இங்கே அறிவியலையே போலியாக மாற்ற தலைமைப் பதவியில் அமர்ந்தவர் முதல் முனைப்போடு பரப்புரை செய்கின்றனர்.
மரத்தடியில் அமர்ந்திருந்த நியூட்டன், கீழே விழுந்த ஆப்பிளை கடவுள் பசியாற்ற கொடுத்தார் என்று நினைத்து சாப்பிட்டிருந்தால், கணித கணக்கீடுகள் மூலம் ஈர்ப்பு விசையை அறிய உலகம் நீண்ட காலம் காத்திருக்க வேண்டியிருந்திருக்கும்.
மரத்தடியில் புத்தர் அமர்ந்திருந்தார். மனிதர்களின் அனைத்து இன்னல்களுக்கான காரணத்தை ஒரே நாளில் தந்து விடவில்லை. நீண்ட ஆண்டுகளாக மக்களோடு பழகி மக்களோடு இருந்து அவர்களின் துண்பங்களுக்கு விடை என்ன என்று கண்டுபிடித்துக் கொடுத்தார்.
பின்னர் அவரது சீடர்கள் நூற்றுக்கணக்கான சர்வதேச பல்கலைக் கழகங்களைத் திறந்து, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மக்களுக்குக் கல்வி புகட்டினர்.
அவர் எக்காரணம் கொண்டும் மூடநம்பிக்கைக்கு இடம் கொடுக்க வில்லை. ஆகையால் தான் பவுத்தத்தை அறிவியல்பூர்வமாக எடுத்துகொண்ட கொரியா, சீனா, தைவான், ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் இன்று அனைத்து துறைகளிலும் முன்னேறி உள்ளன.
ஆனால், புத்தரைக் கடவுளாக பார்த்த நாடுகளான இலங்கையும், மயன்மாரும் இன்றும் மதச் சிக்கல்களில் விழுந்து எழமுடியாமல் தவிக்கின்றன.
ஆனால், புத்தர் பிறந்த இந்த மண்ணில் பள்ளிக் கல்வியில் பகவத் கீதை, ராமாயணம், மகாபாரதம் சேர்க்கப்படுகிறது. பள்ளி மாணவர்களிடம் அறிவியல் சிந்தனையை எப்படி வளர்ப்பது என்ற பாடத்திட்டம் வட இந்தியாவில் கிட்டத்தட்ட நீக்கப்பட்டே விட்டது. பகவத் கீதையை சேர்க்கும் கூட்டம் எப்படி அறிவியலைச் சேர்க்கும்.
புராணக் கதைகளுக்கும் வரலாற்றுக்கும் என்ன வேறுபாடு என்பதை அறிய பாடத்திட்டம் சேர்க்கப்படும் என்று கேள்விப்பட்ட துண்டா?
மேலை நாடுகளில் எந்த நிறுவனத்தின் நபராக இருந்தாலும், அறிவியலுக்கு புறம்பான பேச்சு அல்லது ஜாதிப் பாகுபாட்டை கடைப்பிடிப்பது, கண்டுபிடிக்கப் பட்டால் அவர் அந்த நிறுவனத்திலிருந்து வெளியேற்றப் படுவார்.
ஏனெனில், நாடு அறிவியலால் முன்னேறி வருகிறது. மூடநம்பிக்கை கொண்ட, அறிவியலுக்கு எதிரான மக்கள் நிறுவனங்களில் அமர்ந்து நாட்டின் சூழலை கெடுத்து, இந்த நாட்டில் அறிவியல் முன்னேற்றத்தைத் தடுக்கிறார்கள்.
அனைத்து நிறுவனங்களிலும் இது கடுமையாக அமல்படுத்தப்பட வேண்டும். ஆனால் இங்கே அய்.அய்.டி. இயக்குநரே மாட்டு மூத்திரம் குடித்தால் காய்ச்சல் சரியாகும் என்கிறார்.
பாகிஸ்தானும், நேபாளும் பங்களாதேசும், சிறீலங்காவும், சீனாவோடு சேர்ந்து செயற்கை தொழில் நுட்பத்திற்கான ஆயத்தப் பணிகளைத் துவங்கி தங்கள் நாட்டின் சிறுதொழில் வளர்ச்சி குறித்து முனைப்போடு பணியாற்றி வருகின்றன. ஆனால் இங்கே கும்பமேளாவிற்கு எத்தனை பேர் வந்தார்கள் என்று செயற்கை தொழில் நுட்பத்தின் மூலம் எண்ணிக்கொண்டு இருக்கிறோம்.