மழவை தமிழமுதன்
எங்கள் தமிழர் இலக்கியமாம் பெரிய புராணத்தை வேண்டாம் என்று சொல்லும் பெரியார் புராணம் எங்களுக்கு தேவையில்லை என்கிறார் சங்கி சீமான்.
மண்ணின் மைந்தர்களை தாழ்ந்த ஜாதியென்றும் சுத்தமில்லாதவர்கள் என்றும் தொட்டால் தீட்டு என்று சொல்லியும் அதனை உறுதிப்படுத்த ஒரு கதையாடலை உருவாக்கி 63 நாயன்மார்களுக்குள் அடிமை நந்தன் ஒருவன் இருந்தான். அவன் சிவனுக்கு அடிபணிந்து கிடந்தான் என்றும், தில்லை கோவிலுக்கு பரமசிவனை வழிபட சென்றபோது நந்தியே விலகி தெற்கு வாசலில் வழி விட்டது என்றும், ஆனாலும் உள்ளே விடாத தீட்சிதர்கள் தீயில் இறக்கி சோதித்தனர் . சோதனையில் வென்ற நந்தன் தீட்டு கழிக்கப்பட்டு பூணூல் தரிக்கப்பட்டு கோயிலுக்குள் சிலையானான் என்பதோடு முடித்துக்கொண்டது .
வேறு யாரேனும் வரலாமா என்றால் அந்த தெற்கு வாசலை பூட்டியே வைத்திருக்கிறது இன்றுவரை.
மண்ணின் பூர்வ குடிகளை அவமானப் படுத்த அடிமை நந்தன் என்ற கதையை உருவாக்கி பறையர் ஜாதியைச் சேர்ந்தவர்கள் பகவானை பார்க்க வேண்டுமென்றால் தீ குண்டத்தில் இறங்க வேண்டும். அப்படியே சோதனையில் வெற்றி பெற்று உள் நுழைந்தாலும் அந்த வாயில் தீட்டுப்பட்டு விட்டதாய் பூட்டப்பட வேண்டும் என்றுச் சொல்லி வைத்திருக்கிற பெரியபுராணம் தமிழ்தேசிய சீமானுக்கு வேண்டுமாம்.
பரமசிவன் நந்தனுக்கு மோட்சம் கொடுத்தது உண்மையென்றால் அவன் சந்ததி எல்லாம் தீட்டு என்று சொல்லப்பட்டு கோயிலுக்கு வெளியே நிறுத்தப்பட்டது ஏன்? என்ற கேள்வியை முன்வைத்து பெரிய புராண குப்பைகளைத் தூக்கி எறியச்சொன்ன ஜாதி ஒழிப்புப் போராளி தந்தை பெரியார் வேண்டாமாம்…
ஆரிய அடிமை நந்தனல்ல ஸநாதனத்தை எதிர்த்துப் போர் புரிந்த பவுத்த மன்னன் நந்தன் என்று ஆய்வுகளை முன்வைத்த போதும்கூட நூற்றுக்கணக்கான பறையர்களைத் திரட்டி ஆளுநர்
ஆர்.எஸ்.எஸ். சங்கிகள் பூணூல் அணிவித்து தீட்டு கழிக்கும் நிகழ்வை நடத்திய போது அதற்கு மூலமாய் இருக்கும் பெரிய புராணத்தை எதிர்த்த தந்தை பெரியாரின் தைரியம் தான் இன்றும் எதிர்க் கேள்வியின் சாரமாக இருக்கிறது…
சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழிலே தேவாரம், திருவாசகம் பாடக்கூடாது என்று ஓதுவார் ஆறுமுகசாமியை தீட்சிதர்கள் அடித்து விரட்டிய போதும், கனகசபை மேடை ஏறியதால் தமிழ்ப் பெண் தீட்சத பார்ப்பனர்களால் அடித்து துரத்தப்பட்ட போதும், இன்று வரை பூட்டப்பட்டு கிடக்கும் நந்தன் வாயில் திறக்கப்படாமல் இருப்பது ஏன் என்ற கேள்வியின் போதும், பெரியாரின் திராவிட இயக்கம் அவரின் கருத்துக்களை உள்வாங்கிய ஜனநாயக சக்திகளே தீட்சிதர்களுக்கு எதிராக போராடி இருக்கிறார்கள், பேசியிருக்கிறார்களேத் தவிர தந்தை பெரியாரை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக நிறுத்த முனையும் சீமானின் தத்துவ தமிழ்த் தேசியத் தலைவர்கள் அல்லது நாம் தமிழர் உள்ளிட்ட யாரேனும் மண்ணின் மைந்தர்களான தமிழர்களின் உரிமைகளுக்காகப் போராடியதுண்டா?
எப்போதும் தில்லை தீட்சிதர்களின் ஜாதித் திமிரை எதிர்த்தும் புராண புரட்டுகளை வெளிக்கொண்டு வந்தும் “சிதம்பர ரகசியம்” என்னும் நூலைத் தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள் சிதம்பரம் கோவில் தீட்சதர்களுக்குச் சொந்தம் என்பதற்கு ஆதாரம் உண்டா? கொள்ளை அடிக்கின்றனர் என்பதற்கு ஆதாரம் உண்டு. கடவுள் கொடுத்தார் என்பது ஏற்கத்தக்கதா? இக்கோவிலை அரசு கைப்பற்றும்வரை நம் போராட்டம் ஓயாது – இது தொடக்கம்தான் என்றும் முழங்கினார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன் அவர்கள் “ஒரு நாள் உடைபடும் சிதம்பர ரகசியம், அதற்கு தெற்கு வாசலை தகர்ப்பது அவசியம்” எனும் முழக்கத்தை முன்வைத்தார்.
மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய அமைப்புகள் தான் தீட்சிதப் பார்ப்பனர்களை எதிர்த்ததே தவிர தவறியும் போலித் தமிழ்த் தேசிய கூட்டம் இதில் பங்கு கொள்ளவில்லை….
பெரியாரா? பெரிய புராணமா? என்றால் ஒடுக்கப்பட்ட மக்களை தீட்டு என்று தீயில் இறக்கிய பெரிய புராணம் வேண்டாம் ஜாதி இழிவை ஒழிக்கப் போர் புரிந்த பெரியாரே வேண்டும்.