இந்தியாவில் மத நம்பிக்கை கொண்டவர்களிடம் அறிவியல் மனப்பான்மை ஏன் வளராமல் இருக்கிறது?
சரியான பதில்: மதம்
ஒரு நிகழ்வின் பின்னணியில் உள்ள துல்லியமான காரணங்களைக் கண்டறிந்து புரிந்துகொள்வதற்குப் பதிலாக, முன்னோர்களின் நம்பிக்கை என்ற பெயரில் கற்பனை ஊகங்களை கண்மூடித்தனமாக நம்புவதற்கே மதம் முன்னுரிமை கொடுக்கிறது.
இத்தகைய சூழலில், ஒருவருக்கு எவ்வளவு அறிவியல் கற்பித்தாலும், அவர் அறிவியலையும் கூட ஒரு கிளிப்பிள்ளையாக மனப்பாடம் செய்வாரே தவிர, அவரது சிந்திக்கும் முறை அதே பழைய மூடநம்பிக்கை கொண்ட மக்களைப் போலவே இருக்கும். இதன் விளைவாக, புதிதாக ஏதாவது கண்டுபிடிப்பது என்பது கனவாகி விட்டது
ஆனால் நாட்டின் வளர்ச்சிக்கான அறிவியல் பார்வைக்கு தடையாக இருந்துவிட்டு, நாடு முன்னேறாமல் போனதற்கு காரணம் இட ஒதுக்கீடே என்று ஒடுக்கப்பட்ட மக்களின் மீதே குற்றம் சாட்டுவதைக் காணலாம்.
இதனால்தான் கல்வி நிறுவனங்கள் மற்றும் உயர் அமைப்புகளின் இயக்குநர்கள், தலைவர்கள் கூட வேதத்திலிருந்து அறிவியல் தோன்றியது என்றும், சாணம் மற்றும் கோமியத்தால் புற்றுநோய் போன்ற தீராத நோய்களுக்கு சிகிச்சை அளிக்கலாம் என்றும் முட்டாள்தனமான கூற்றுக்களை கூறுவதைக் காண முடிகிறது.
இவர்கள் அனைவரிடமும் பொதுவான விஷயம் என்னவென்றால், ஒடுக்கப்பட்ட, மக்களின் அறிவுத்திறனைக் கண்டால் அவர்களுக்கு எப்போது ஒரு எரிச்சல் இருப்பதோடு, SC, ST, OBC ஒடுக்கப்பட்ட சமூக மக்களின் தலைவர்கள் மீதும் கடுமையான விமர்சனம் வைப்பதைக் காணலாம்
இவ்வாறு செய்வதற்குப் பின்னால் உள்ள ஒரே காரணம், மேல்ஜாதி வர்க்கத்தினர் உலகின் எந்த நாடுகளுக்குச் சென்றாலும் தங்களின் ஜாதிப்பற்றை விட்டுவிடுவதில்லை.
பெரிய நிறுவனங்களில் அமர்ந்து அதிக அளவு ஊதியம் பெறுகிறார்கள். எனவே அனைவரின் கவனத்தையும் திசை திருப்ப, அதே பழைய அர்த்தமற்ற பிற்போக்கான பேச்சுக்களைப் வெளிநாடுகளில் இருந்துகொண்டும் பேசுவார்கள்.
சரியாக ஆராய்ந்தால், எந்தெந்த நாடுகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதோ, அந்த நாடுகளில் அனைத்து பிரிவு மக்களின் ஆதரவும் உள்ளது.
ஆனால் இந்தியாவில், பெரும்பான்மை பிரிவினரின் பிரதிநிதித்துவத்தை அவர்களின் மக்கள்தொகைக்கு ஏற்ப முக்கிய நீரோட்டத்தில் கொண்டு வருவது என்பது பகல் கனவாக உள்ளது. மாறாக, சமூக ஊடகங்களில் அவர்களை திட்டுவதும் இழிவுபடுத்துவதும் மத கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக மாறிவிட்டது.
இத்தகைய சூழ்நிலையில், இந்த மத சிந்தனை கொண்டவர்களிடம் அறிவியல் மனப்பான்மை வளர முடியுமா? ஆனால் அவர்களிடம் தற்போது அனைத்து அதிகாரங்களும் சென்று சேர்ந்துள்ளது.
ஆகையால் தான் அவர்கள் துணிந்து நாட்டின் பெரும்பான்மை ஒடுக்கப்பட்ட மக்களின் மீது வன்மங்களைக் கொட்டுகிறார்கள். அவர்களின் இந்த சூழ்ச்சியை சில ஒடுக்கப்பட்ட மக்களும் அறிந்து கொள்ளாமல் அவர்களுக்கு கைக்கூலியாக மாறிவிட்டதுதான் கொடுமை.