வெளிநாட்டில் சந்தி சிரிக்கிறது இந்தியா!

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

மணிப்பூரில் வன்முறையை உடனடியாக நிறுத்த நடவடிக்கை: இந்தியாவை வலியுறுத்தி அய்ரோப்பிய நாடாளுமன்றம் தீர்மானம்!

அரசியல்

புதுடில்லி,ஜூலை16– மணிப்பூரில் கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வரும் வன்முறையை உடனடியாக நிறுத்தி, அனைத்து மதச் சிறுபான் மையினரை பாதுகாக்க இந்திய அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அய்ரோப் பிய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மணிப்பூரில் பெரும்பான்மை யாக உள்ள மெய்தி சமூகத்தினருக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்கு வதற்கு எதிர்ப்பு தெரிவித்து குகி பழங்குடியினர் நடத்திய போராட் டம் இனக் கலவரமாக மாறி கடந்த 2 மாதங்களாக வன்முறை நீடித்து வருகிறது.

இந்நிலையில், பிரதமர் நரேந் திர மோடி 2 நாள் பயணமாக பிரான்சுக்கு சென்ற நிலையில், அந்நாட்டின் ஸ்டிராஸ்பர்கில் உள்ள அய¢ரோப்பிய நாடாளு மன்றத்தில், மணிப்பூர் நிலவரம் குறித்த தீர்மானத்தின் மீது வியாழக் கிழமை விவாதம் நடத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

அந்தத் தீர்மானத்தில், ‘மணிப் பூரில் ஹிந்து மெய்தி சமூகத்தின ருக்கும் கிறிஸ்தவ குகி சிறுபான்மையின சமூகத்துக்கும் இடையே நடைபெற்று வரும் வன்முறையில் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 40,000-க்கும் அதிகமானோர் இடம் பெயர்ந்துள்ளனர்.

அவர்களின் சொத்துகள் மற் றும் மத வழிபாட்டுத் தலங்கள் இடித்துச் சேதப்படுத்தப்பட் டுள்ளன.

பிரிவினைவாத கிளர்ச்சியாளர் களின் தாக்குதல்களால் தீவிர மனித உரிமை மீறல்களை ஏற் கெனவே மணிப்பூர் சந்தித்துள்ளது. 

அங்கு அண்மையில் நடை பெற்று வரும் வன்முறைக்கு, மாநி லத்தில் குறிப்பிட்ட மதச் சிறுபான் மையினரை ஒடுக்கும் வகையில் ஒன்றிய மற்றும் மாநிலத்தில் ஆளும் பாஜக அரசுகளின் இன தேசியவாத பிரிவினைக் கொள்கை நடைமுறைப் படுத்துதலின் தாக் கமே காரணம் என்று மனித உரிமைக் குழுக்கள் குற்றஞ்சாட்டு கின்றன.

அங்கு கலவரம் மேலும் தீவிர மடையாமல் தடுக்க இந்திய அரசு அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண் டும். பதற்றத்தைத் தணிக்கும் வகையில் அரசியல் தலைவர்கள் பாகுபாடற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதோடு, மக்களிடையே நம் பிக்கையை மீட்டெடுக்கும் வகையில் வன்முறையைத் தூண்டும் வகையிலான கருத்துகள் தெரிவிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தடையற்ற மனிதா பிமான உதவிகள் வழங்கப்படுவதை ஒன்றிய, மாநில அதிகாரிகள் அனு மதிப்பதோடு, வன்முறை தொடர் பாக சுதந்திரமான அமைப்புகள் விசாரணை நடத்தவும் அனுமதிக்க வேண்டும்.

மேலும், அங்கு அமல்படுத்தப் பட்டுள்ள பாதுகாப்புப் படை களுக்கான சர்ச்சைக்குரிய சிறப்பு அதிகாரச் சட்டத்தை திரும்பப் பெறுவதோடு, இணைய சேவைக் கான தடையையும் நீக்கி, பத்திரி கையாளர்கள், பன்னாட்டு பார் வையாளர்கள் ஆகியோர் மணிப் பூருக்குள் செல்ல அனுமதிக்க வேண்டும்.

இந்தியாவுடனான பேச்சு வார்த்தையில் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக மதிப்பீடுகளுக்கு அய்ரோப்பிய யூனியன் முக்கியத் துவம் அளிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *