புதுடில்லி, ஜூலை 16– டில்லியில் உள்ள யுபிஎஸ்சி (ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம்) நூல கத்தில் முக்கியத் தமிழ் நூல்கள் இல்லை எனப் புகார் எழுந்துள்ளது. இதன் காரணமாக, அங்கு வினாத் தாள் பணிக்கு வரும் தமிழாசிரி யர்கள் குறிப்புகள் எடுப்பதில் தவிக்கும் நிலை தொடர்கிறது.
தமிழ் உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழிகளில் ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணை யம் (யுபிஎஸ்சி) தேர்வுகளை நடத் துகிறது. இதற்கான வினாத்தாள் கள் தயாரித்தல், அவற்றை மாற்றி அமைத்தல், விடைத்தாள்களை திருத்துதல் போன்ற பணிகள் டில்லியில் உள்ள யுபிஎஸ்சி அலுவ லகத்தில் நடைபெறுகிறது.
இதற்காக, அம்மொழிகளுக் கான பேராசிரியர்கள் நாடு முழுவதிலுமிருந்து அழைக்கப்படு கின்றனர். இவர்கள் யுபிஎஸ்சி வளாகத்தில் தங்கி தங்கள் பணியை செய்கின்றனர். அப்போது அவர் கள் வெளியில் செல்லவும், அவர் களை வெளிநபர்கள் சந்திக்கவும் அனுமதிக்கப்படுவதில்லை.
பேராசிரியர்கள் குறிப்புகளை எடுக்க, யுபிஎஸ்சி நூலகத்தின் நூல்களை பயன்படுத்தலாம். ஆனால், இங்கு திருக்குறள்,சங்க இலக்கியம் உள்ளிட்ட முக்கிய மானத் தமிழ் நூல்கள் இல்லை எனக் கூறப்படுகிறது. ஒருசில நூல்கள் மட்டுமே இருப்பதாகவும், இதுகுறித்து யுபிஎஸ்சி நூலகத்தில் கூறியும் பலனில்லை என்றும் புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து யுபிஎஸ்சி பணிக் குச் சென்று வரும் தமிழ் பேராசிரி யர்கள் வட்டாரத்தில் கூறும் போது, “தமிழ் நூல்களை உடன் கொண்டுவர எங்களை அனுமதிப் பதில்லை.
நாங்கள் அந்த நூலகத்தில் உள்ள என்சிஇஆர்டி ஆங்கில நூல்களை படித்து தமிழில் புரிந்து கொண்டு வினா, விடைத்தாள் பணியை செய்ய வேண்டியுள்ளது. இதில், ஆங்கிலப் புலமை குறைவாக இருக்கும் தமிழ்ப் பேராசிரியர்கள் தடுமாறுவதும் நிகழ்கிறது. தமிழி லும் குடிமைப்பணி தேர்வு எழுத அனுமதிக்கும் போது அதற்கான நூல்கள் கிடைத்தால் தானே தேர்வாளர்களுக்கு உகந்த வகை யில் பணி செய்ய முடியும்? இது குறித்து பல வருடங்களாக யுபிஎஸ்சியில் புகார் செய்தும் பலனில்லை” என்றனர்.
இதுகுறித்து யுபிஎஸ்சி நூலகர் அமித் பிரகாஷ் குப்தா கூறுகையில், “தமிழாசிரியர்கள் கூறும் புகார் உண்மைதான். இதை சரிசெய்ய நானும் பல வருடங்களாக முயற்சிக் கிறேன். என்சிஇஆர்டி நூல்களை சென்னையில் உள்ள ஒன்றிய அரசின் அலுவலகமான எஸ்சிஇ ஆர்டி தமிழில் வெளியிடுகிறது.
அதை அனுப்பும்படி அவர் களுக்கு எழுதினால், ஆள் அனுப்பி பெற்றுக் கொள்ளும்படி கூறுகின் றனர். டில்லியிலிருந்து ஆள் அனுப்ப யுபிஎஸ்சி விதிகள் அனும திக்கவில்லை. தனியார் நூல் வெளி யீட்டாளர்கள் தங்கள் வெளியீடு களை மட்டும் அனுப்புவதாக தெரிவிக்கின்றனர். இதர வெளி யீடுகள் கிடைப்பதும் சிக்கலாக உள்ளது.
தேர்வாணையப் பணிக்காக வரும் பேராசிரியர்களும் நூல் களை வாங்கிவர தயங்குகின்றனர். இதுபோன்ற பல நடைமுறை பிரச்சினைகளால் தமிழ் நூல்கள் வாங்க முடியாமல் உள்ளது” என்று தெரிவித்தார்.
மற்ற மொழிகளின் பிரச்சினை களை அறிந்த அந்தந்த மாநில அரசுகள், யுபிஎஸ்சியிடம் பேசி அந்நூல்கள் தொடர்பான பிரச் சினைகளை தீர்த்து வைக்கத் தொடங்கியுள்ளனர். இது போல் தமிழ்நாடு அரசும் யுபிஎஸ்சிக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ஒன்றிய, மாநில அரசுகளுக்கான அதிகாரிகளை யுபிஎஸ்சி தேர்வு செய் கிறது. இதன் தேர்வில் வெற்றி பெறும் பட்டதாரிகள் சுமார் 25 வகையான பிரிவுகளில் பணி அமர்த்தப்படுகின்றனர். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த யுபிஎஸ்சி தேர்வில் தமிழுக்கு உள்ள நிலை மிகவும் கவலைக்குரியதாக உள் ளது.