சென்னை,ஜன.31- மக்காச் சோளத்திற்கு விதிக்கப்பட்டிருக்கிற ‘செஸ்’ வரியை நீக்க வேண்டும் என்று நாடாளமன்ற உறுப்பினர் துரை வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்ப தாவது:
மக்காச்சோளத்திற்கு புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள செஸ் வரி விதிப்பை திரும்பப்பெற்று, அதனை விளைவிக்கும் விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு ஆதரவு வழங்கிட வேண்டும் என்று கடந்த 27ஆம் தேதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்தேன்.
மக்காச் சோளத்திற்கு வரி
28ஆம் தேதி திருச்சி வந்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலி னிடம் நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தேன்.
தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் விளைவிக்கப்படும் பயிராக மக்காச்சோளம் உள்ளது. குறிப்பாக தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட் டங்கள், மற்றும் மத்திய மாவட்டங்களிலும் முக்கிய வேளாண் பயிராக மக்காச்சோளம் உள்ளது. வானம்பார்த்த பூமியுடைய விவசாயிகளின் வாழ்வாதாரத்தை இந்த மக்காச்சோள விவசாயம் தான் அச்சாணியாக இருந்து காத்துக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் மக்காச் சோளத்திற்கு ஒரு சதவீத செஸ் வரி விதிக்கப்பட்டுள்ளது. அதை செலுத்திய பிறகே மக்காச்சோளத்தை சந்தைப்படுத்த முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
உரவிலை ஏற்றம்
விதைவிலை ஏற்றம், உரவிலை ஏற்றம் போன்ற காரணங் களால் மக்காச்சோளம் பயிரிட விவசாயி களுக்கு அதிகம் செலவாகிறது. ஆனால், காட்டுப்பன்றி பிரச்சனை யாலும், மழை போன்ற இயற்கை காரணங்களாலும் விவசாயிகள் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். அதனால் விவசாயிகளுக்கு உரிய இலாபமும் கிடைப்பதில்லை. இப்போது கூடுதலாக இந்த செஸ் வரிவிதிப்பால் மக்காச்சோளத்தின் விற்பனை விலையை குறைக்க வேண்டிய அவசியம் எழுகிறது.
அதுமட்டுமல்லாமல், இந்த மக்காச்சோளம் ஆலைக்குச் சென்று மீண்டும் கால்நடைகளுக்கும் கோழி களுக்கும் தீவனமாக திரும்பி வரும் போது செஸ் வரி கரணமாக கூடுதல் விலை கொடுக்க வேண்டி வருகிறது.
ஆதலால் இந்த செஸ் வரியால் மக்காச்சோளத்தை விளைவிக்கும் விவசாய பெருங்குடி மக்களுக்கு விற்பனை மற்றும் கொள்முதல் ஆகிய இரண்டு நிலைகளிலும் சிரமமும் நட்டமும் ஏற்படுகிறது.
எனவே இதனை கருத்தில் கொண்டு மக்காச்சோளத்திற்கு விதிக் கப்பட்டுள்ள 1 சதவீத செஸ் வரியை நீக்கி, விவசாயிகளுக்கு ஆதரவு வழங் கிட வேண்டும்.
அதே கோரிக்கையை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், நிதி மற்றும் மனிதவள மேம் பாட்டுத்தித்துறைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோரையும் தனித்தனியாக மனு கொடுத்துள்ளேன்.
இருவரும் எனது கோரிக்கையை முழுவதுமாக உள்வாங்கிக்கொண்டு, நிச்சயம் முதல்வரை சந்தித்து, மக்காச்சோளத்திற்கு விதிக்கப்பட்ட செஸ் வரியை நீக்க நிச்சயம் ஆவன செய்வோம் என்று உறுதியளித் தார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.