கன்னியாகுமரி மாவட்ட கழகம் சார்பாக விழிப்புணர்வு பிரச்சாரம் தக்கலை பகுதியில் மாவட்ட கழகத் தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது. கழக காப்பாளர் ஞா.பிரான்சிஸ், மாவட்டத் துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள், பகுதி தலைவர் ச.ச. மணிமேகலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட கழக செயலாளர் கோ. வெற்றிவேந்தன் பிரச்சாரத்தினை தொடங்கிவைத்தார்.
தந்தை பெரியாருடைய கருத்துக்கள் அடங்கிய நூல்கள், துண்டறிக்கைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. அமைப்புசாரா தொமுச மாவட்டச் செயலாளர் சி.சுகுமாறன், மாவட்டத் துணைச் செயலாளர் சி.அய்சக்நியூட்டன், இளைஞரணி செயலாளர் இரா.இராஜேஷ், பத்மநாபபுரம் நகர கழக அமைப்பாளர் ஜாபினோ, டாக்டர் கலைச் செல்வன் தோழர்கள் ஜெசிந்தா, கனகபாய், ராஜன், பிரதீபன், டென்னிசன், பிரசன்ன மோகன், ராஜமணி, வில்சன் மற்றும் தொமுச நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.