சென்னை, ஜன. 31- வடசென் னையில் 50ஆவது பெரியாரியல் பயிற்சிப் பட்டறையை சிறப்போடு நடத்துவது குறித்து வடசென்னை மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் 27.1.2025 அன்று மாலை 6 மணிக்கு சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், தலைமை செயற்குழு உறுப்பினர் தே.செ.கோபால், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் வழக்குரைஞர் சோ.சுரேசு, தகவல் தொழில்நுட்பக் குழு ஒருங்கிணைப்பாளர் வி.சி.வில் வம், மாவட்ட தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன், காப் பாளர் கி.இராமலிங்கம், துணைத் தலைவர் நா.பார்த்திபன், மகளிர் பாசறை செயலாளர் த.மரகதமணி, அமைப்பாளர் சி.பாசுகர், செம்பியம் கழகத் தலைவர் ப.கோபாலகிருஷ் ணன், அயன்புரம் கழக அமைப்பாளர் சு.துரைராசு, வை.கலையரசன், க.கலைமணி, மாணவர் கழகத் தோழர்கள் டி.பர்தின், சஞ்சய் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.
50ஆவது பெரியாரியல் பயிற்சிப் பட்டறை மற்றும் தமிழர் தலைவர் நேரில் பங்கேற்கும் சிறப்பினையும் பெற்றுள்ள இந்நிகழ்ச்சியினை மிகச் சிறப்பாக நடத்துவதென்று முடிவு செய்யப்பட்டது.
அயன்புரம் கழக அமைப்பாளர் சு.துரைராசு-ஜீவரேகா இணையரின் 53ஆம் ஆண்டு இணையேற்பு நாளினை (27.1.2025) முன்னிட்டு தலைமை செயற்குழு உறுப்பினர் தே.செ.கோபால் பயனாடை அணிவித்தார். அனைத்துத் தோழர்களும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தனர். இனிப்பு வழங்கப்பட்டது.