திராவிட மாடல் ஆட்சியில் பெண் கல்விக்கு முக்கியத்துவம் : கனிமொழி எம்.பி. பேச்சு

1 Min Read

தூத்துக்குடி, ஜன 31 தமிழ்நாட்டில் நடைபெறும் திராவிட மாடல் ஆட்சியில் பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது என்று கனிமொழி எம்.பி. கூறினார்.

கனிமொழி எம்.பி.,
தூத்துக்குடி ஏபிசி மகாலட்சுமி பெண்கள் கல்லூரியில் 29.1.2025 அன்று நடைபெற்ற பொன்விழா நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற அவா், புதிய ஆடிட்டோரியம் கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டி பேசினார்.
அப்போது அவா் பேசியதாவது: ஒரு பெண் கல்வி பெறுவதற்கும், பள்ளிக்கூடம் செல்வதற்கும், கல்லூரிக்கு சென்று படிப்பதற்கும் பல்வேறு போராட்டங்களைத் தாண்டி வர வேண்டிய நிலை இருந்தது. ஆனால், அந்த நிலை மாற்றப்பட்டு, தற்போது தமிழ்நாட்டில், பள்ளி படிப்பு முடித்த மாணவிகள் பலா் உயா் கல்விக்கு செல்கின்றனா். இந்த நிலையை எட்டுவதற்கு, இதற்கு முன் இருந்த தலைமுறைகள் பல தியாகங்களையும், போராட்டங்களையும் செய்துள்ளனா்.

பெண் கல்விக்கு முக்கியத்துவம்
வளா்ந்த நாட்டை எடுத்துக்கொண் டாலும், வளா்ந்த சமூகத்தை எடுத் துக்கொண்டாலும், அதற்கு முக்கிய காரணமாக இருப்பது பெண் கல்வி. எனவேதான், தமிழ்நாட்டில் நடை பெறும் திராவிட மாடல் ஆட்சியில் பெண்கல்விக்கு முக்கியத்துவம் அளிக் கப்பட்டு வருகிறது. தந்தை பெரியாரை தாண்டி ஒரு பெண்ணியவாதியை நான் படித்தது இல்லை. அந்த அளவுக்கு அவா், பெண்களுக்காக சிந்திக்கக்கூடியவா். பெண்களுக்கு எதிராக எந்தத் தடைகள் இருந்தாலும் அதை உடைத்து எறியவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *