சென்னை, ஜன.31 சென்னை பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் இல்லை என்று ஆளுநர் ஆர்என் ரவி பேசியது பற்றிய கேள்விக்கு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா பதிலடி கொடுத்துள்ளார். சென்னை மாநகராட்சி மேயர் பிரியா நேற்று (31.1.2025) சென்னையில் பத்திரி கையாளர்களை சந்தித் தார். அப்போது மேயர் பிரியாவிடம், ‘‘வெளி மாநிலங்களில் இருந்து சென்னைக்கு படிக்க வரும் பெண்களுக்கு பாது காப்பு இல்லை என்று ஆளுநர் ஆர்.என் ரவி கருத்து தெரிவித்துள்ளார். சென்னையின் பெண் மேயராக உங்களின் கருத்து என்ன?” என்ற கேள்வி கேட்கப்பட்டது.
பாதுகாப்பான நகரம்
அதற்கு சென்னை மேயர் பிரியா, ‘‘சென்னை மாநகராட்சியை பொறுத்த வரை பெண்களுக்கு பாதுகாப்பான மாநகர மாக சென்னை அங்கீ கரிக்கப்பட்டுள்ளது. இந்தி யாவில் உள்ள பிற மாநகரங்களை பார்க்கும் போது 2022இல் சென்னை தான் பெண்களுக்கு பாதுகாப்பான சிட்டி என்ற அங்கீகாரம் கிடைத் தது.
முதலமைச்சர் இப் போது பெண்களுக்கான ஆட்சியை நடத்தி வருகிறார். ஆளுநர் மாளிகையிலேயே இருந்து கொண்டு இதுபோன்ற விமர்சனங்களையும், தேவையில்லாத சர்ச்சை யையும் கூறுவதை விட்டு விட்டு பெண்களுக்கு எந்த அளவுக்கு முக்கியத்தும் உள்ளது. பெண்களுக்கான ஆட்சி எந்த அளவுக்கு இருக்கு? பெண்களுக்கான திட்டங்கள் எந்த அளவுக்கு இருக்கிறது. அந்த திட்டங்களால் பயனடையும் பெண்கள் எவ்வளவு பேர்? என்பதை நேரில் வந்து பார்க்கும்படி ஆளுநரை கேட்டுக் கொள் கிறேன்” என்று கூறினார்.
ஆளுநர்
குற்றச்சாட்டுக்கு பதிலடி
முன்னதாக சிறீபெரும் புதூரை யொட்டிய பொடவூர் பகுதியில் அகில இந்திய மகளிர் சங்கத்தின் 93ஆம் ஆண்டு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டை பெண்களுக்கு சென்னை பாதுகாப்பான நகரமாக இல்லை என்று கூறி யிருந்தார்.
இதுதொடர்பாக ஆளுநர் ஆர்.என் ரவி, ‘‘சென்னை பாதுகாப்பான நகரமாக மாற வேண்டும். பட்டமளிப்பு விழாக்களில் என்னை சந்தித்து பேசும் மாணவிகள், சென்னை பெண்களுக்கு பாதுகாப்பானதாக இல்லை என்று தங்கள் பெற்றோர்கள் கூறுவதாகவும், சென் னைக்கு அனுப்ப தயங் குவதாகவும் தெரிவித்து உள்ளனர். எனவே சென்னை பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக மாற வேண்டும்” என்று கூறியிருந்தார். இந்நிலையில் தான் ஆளுநர் ஆர்என் ரவிக்கு, சென்னை மேயர் பிரியா பதிலடி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது