பெரியாரின் வாக்கு பலித்தது!
* மகா கும்பமேளா நெரிசலில் உயிரிழந்த முப்பது பேரின் குடும்பங்களுக்குத் தலா ரூ.25 லட்சம் இழப்பீடு.
– உ.பி. முதலமைச்சர் அறிவிப்பு
>> ‘‘கடவுளை மற, மனிதனை நினை’’ என்ற தந்தை பெரியாரின் வாக்குப் பலித்தது.
தற்செயல் என்ற யுக்தி!
* மீனவர்கள் மீதான துப்பாக்கிச் சூடு தற்செயலாக நடந்தது- இலங்கை கடற்படை விளக்கம்.
>> மீனவர்கள் மீன்பிடித்தது தற்செயல்; இலங்கை கடற்படை அங்கு வந்தது தற்செயல்; துப்பாக்கி சூடு நடத்தியதும் தற்செயல்; எந்த நிகழ்வு நடந்தாலும் ‘தற்செயல்’ என்று சொல்லித் தப்பிக்க, தற்செயல் என்ற யுக்தி இப்பொழுது கையில் கிடைத்திருக்கிறது!
செய்தியும், சிந்தனையும்…!
Leave a Comment