ஆளும் பா.ஜ.க. அதிர்ச்சி
பெங்களூரு, ஜூலை 16- பெங்களூருவில் வரும் 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெறும் எதிர்க் கட்சிகளின் இரண்டாவது ஆலோ சனைக் கூட்டத்தில் தி.மு.க., திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட 24 கட்சிகளைச் சேர்ந்த தலைவர் கள் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த ஆண்டு நடைபெற வுள்ள மக்களவைத் தேர்தலில் ஆளும் பாஜகவுக்கு எதிராக காங் கிரஸ், திமுக உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரள திட்டமிட்டுள்ளன. இதன் படி எதிர்க்கட்சி தலைவர்களின் முதல் ஆலோசனைக் கூட்டம் கடந்த ஜூன் 23ஆம் தேதி பாட்னாவில் நடைபெற்றது. இதில் தி.மு.க. உள் ளிட்ட 17 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
இதனைத் தொடர்ந்து எதிர்க் கட்சிகளின் 2ஆவது ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவில் வருகிற 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற் கான ஏற்பாடுகளை கருநாடக காங்கிரஸ் தலைவரும், துணை முதலமைச்சருமான டி.கே.சிவ குமார் செய்துவருகிறார். இது குறித்து காங்கிரஸ் மேலிடத் தலை வர்களிடம் விசாரித்தபோது, ”பெங்க ளூருவில் நடைபெறும் 2-ஆவது ஆலோசனைக் கூட்டத்தில் மேலும் சில கட்சிகள் பங்கேற்பது உறுதியா கியுள்ளது. இதில் மொத்தம் 24 கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் பங்கேற்கின்றனர். மதிமுக, விசிக, கொதேமக, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, அனைத்து இந்திய ஃபார் வர்டு பிளாக், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கேரள காங்கிரஸ் (ஜோசப்), கேரள காங்கிரஸ் (மணி) ஆகிய கட்சிகளின் தலைவர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கின் றனர்.
காங்கிரஸ் தேசிய தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலை வருமான மல்லிகார்ஜுன கார்கே 24 கட்சிகளின் தலைவர்களுக்கும் பெங்களூரு ஆலோசனைக் கூட் டத்தில் பங்கேற்குமாறு கடிதம் எழுதியுள்ளார்.
பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல மைச்சர் மம்தா, ஆர்.ஜே.டி மூத்த தலைவர் லாலு பிரசாத் யாதவ், தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிட்டோர் தங்களின் பயணத்தை உறுதி செய்துள்ளனர். டில்லியின் அதிகாரம் குறித்த ஒன் றிய அரசின் அவசர சட்டத்துக்கு எதிரான காங்கிரஸ் ஆதரவு விவ காரத்தில் ஆம் ஆத்மிக்கும் காங்கிர சுக்கும் இடையே மோதல் ஏற் பட்டது. இருப்பினும் இரண்டா வது கூட்டத்துக்கு ஆம் ஆத்மி கட்சிக்கும் அழைப்பு விடுக்கப்பட் டுள்ளது.
இதில் அக்கட்சியின் தலை வரும், டில்லி முதலமைச்ச ருமான அர்விந்த் கேஜ்ரிவாலும் பங்கேற்க இருப்பதாக தெரிகிறது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி யின் நாடாளுமன்றத் தலைவர் சோனியா காந்தியும் கலந்துகொள் கிறார்.
அவர் ஜூலை 17ஆ-ம் தேதி மாலை 6 மணிக்கு பெங்களூருவில் உள்ள தனியார் நட்சத்திர விடுதி யில் 24 கட்சிகளின் தலைவர் களுக்கும் தேநீர் விருந்து அளிக் கிறார். இதைத் தொடர்ந்து 18ஆ-ம் தேதி காலை 11 மணிக்கு அனைத்து எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட் டம் நடைபெறுகிறது” என்றனர்.