விருத்தாசலம், ஜன. 30- விருத்தாச்சலம் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் விருத்தாசலத்திலுள்ள பெரியார் தேநீர் விடுதியில் நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வெங்கட.ராசா கடவுள் மறுப்பு கூறினார். மாவட்டத் தலைவர் த.சீ.இளந்திரையன் அனைவரையும் வரவேற்று கூட்டத்தின் நோக்கம் குறித்து பேசினார். மாவட்ட காப்பாளர் அ. இளங்கோவன், தலைமை வகித்து பேசினார். கடலூர் மாவட்ட காப்பாளர் அரங்க.பன்னீர்செல்வம், மாவட்டச் செயலாளர் ப.வெற்றிச்செல்வன், மாவட்ட துணைத் தலைவர் அ.பன்னீர்செல்வம், மாவட்ட துணைச் செயலாளர் பி.பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்.
நிறைவாக, கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் பேசும்போது, பிப்ரவரி 15ஆம் தேதி சிதம்பரத்தில் நடைபெறும் திராவிடர் கழக பொதுக்குழு கூட்டத்திற்கு விருத்தாசலம் மாவட்டத்தில் இருந்து பெருமளவில் பங்கேற்க வேண்டும், அன்று மாலை நடைபெற உள்ள தீர்மான விளக்கப் பொதுக்கூட்டத்திற்கு தோழர்கள் தேவையான நிதி உதவி செய்திட வேண்டும் என்றும் கூறினார். மேலும், மாவட்ட கழக வளர்ச்சிப் பணிகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள்:
பிப்ரவரி 15 ஆம் தேதி சிதம்பரத்தில் நடைபெறும் திராவிடர் கழகப் பொதுக்குழு மற்றும் தீர்மான விளக்கப் பொதுக்கூட்டத்திற்கு விருத்தாசலம் கழக மாவட்டம் சார்பில் நிதி உதவி, சுவர் விளம்பரம் உள்ளிட்ட விளம்பரப் பணிகளை செய்வதென்றும், விருத் தாசலத்திலிருந்து 50 இருசக்கர ஊர்திகளில் பொதுக்குழுவிற்கு செல்வது எனவும்,
விருத்தாசலம் கழக மாவட்டத்தில் உள்ள அனைத்து தோழர்கள் வீட்டிலும் பிப்ரவரி 2 ஆம் தேதி பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தலைமையில் கழகக் கொடி ஏற்றுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதிய பொறுப்பாளர்கள்:
கம்மாபுரம் ஒன்றியம்-
ஒன்றிய தலைவர் த.தமிழ்ச்செல்வன் (சின்ன காப்பான்குளம்)
ஒன்றிய செயலாளர் ந.பிரவீன் (கோபால புரம்)
நன்கொடை அறிவித்தோர்
1. காப்பாளர் அ.இளங்கோவன் – 5000
2.மாவட்ட துணைச் செயலாளர் பி.பழனிச்சாமி – 2000
3.மாவட்ட துணைத் தலைவர் அ.பன்னீர் செல்வம்-2000
4. விருத்தாசலம் நகர செயலாளர் மு.முகமது பஷீர் – 2000
5. விருத்தாசலம் ஒன்றிய செயலாளர் கா.குமரேசன் -1000
8. பெண்ணாடம் நகரதலைவர் செ.கா.ராசேந்திரன் – 1000,
6..மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வெங்கட. இராசா -500
7. பொதுக்குழு உறுப்பினர் தங்க. இராசமாணிக்கம் -1000
9. இராஜசேகர் -1000
10.கம்மாபுரம் ஒன்றிய தலைவர்
த. தமிழ்ச்செல்வன்-1000
11. ஒன்றிய செயலாளர் ந.பிரவீன் 1000
12. வேப்பூர் வட்டார செயலாளர் ம.இளங்கோவன் -1000
13.மாவட்ட இளைஞரணி துணைத்தலைவர் ஆசெந்தில்-1000
14. விருத்தாசலம் நகர அமைப்பாளர் சு.காரல்மார்க்ஸ் – 1000
15. கங்கை அமரன் – 2000
16.கு. உத்தண்டி- 1000
மொத்தம் – 23,500
இதில், பொதுக்குழு உறுப்பினர் தங்க.ராசமாணிக்கம், கழக சொற்பொழிவாளர் புலவர் இராவணன் , விருத்தாசலம் ஒன்றிய செயலாளர் கா.குமரேசன், மாவட்ட இளைஞரணி தலைவர் செ. சிலம்பரசன், மாவட்ட மாணவர் கழகத் தலைவர் செ.சிபிராஜ், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் ஆ.செந்தில், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் ஆனந்த், விருத்தாசலம் நகர செயலாளர் மு.முகமது பஷீர், விருத்தாசலம் நகர அமைப்பாளர் சு.காரல்மார்க்ஸ், பெண்ணாடம் நகரத் தலைவர் செ.கா.ராஜேந்திரன், திட்டக்குடி நகரத் தலைவர் வெ.அறிவு, கம்மாபுரம் ஒன்றிய செயலாளர் த.தமிழ்ச்செல்வன், வேப்பூர் வட்டார செயலாளர் ம.இளங்கோவன், ந.பிரவீன், இராஜசேகர், வடலூர் முருகன், கங்கை அமரன், இளமதி, பெரியார் பிஞ்சுகள் கபிலன், பொழிலன் உள்பட பலர் கலந்துகொண்டனர். நிறைவாக, விருத்தாசலம் ஒன்றியத்தலைவர் கி.பாலமுருகன் நன்றி கூறினார்.