30.1.2025
தி இந்து:
* டில்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு மற்றும் அய்தராபாத் ஆகிய மாநில அதிகாரிகள் தங்கள் நகரங்களில் கையால் மலம் அள்ளுதல் மற்றும் கழிவுநீர் சுத்தம் செய்தல் எப்போது, எப்படி நிறுத்தப்பட்டது என்பது குறித்து பிப்ரவரி 13 ஆம் தேதிக்குள் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு.
* வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள் பிப்ரவரி 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் என்று பெங்களூரு நீதிமன்றம் தீர்ப்பு. ஜெயலலிதாவின் மருமகள் மற்றும் மருமகன் தீபா மற்றும் தீபக் ஆகி யோர் விலைமதிப்பற்ற பொருட்களின் மீது உரிமை கோரும் மனுக்களை நீதிமன்றம் நிராகரித்தது.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ‘நாங்கள் அலறினோம், அழுதோம், யாரும் கேட்கவில்லை… மக்கள் மற்றவர்கள் மீது நடந்து சென்றனர்’: மகா கும்பமேளா கூட்ட நெரிசலை நேரில் கண்டவர்கள் பல மணிநேர குழப்பம், பீதியை நினைவு கூர்ந்தனர். நீராட 10 கோடி பேர் திரண்டதால் விபரீதம் மகா கும்பமேளா நெரிசலில் சிக்கி 30 பேர் பலி: 60 பேர் படுகாயம்; அரைகுறை ஏற்பாடுகளே காரணம் என பக்தர்கள் குற்றச்சாட்டு.
* முதுகலை மருத்துவ சேர்க்கையில், மாநிலத்தில் வசிப்பவர்கள் என்ற அடிப்படையில் இடஒதுக்கீடு அரசியலமைப்பிற்கு விரோதமானது: உச்ச நீதிமன்றம்
* ‘ஜனநாயகத்தின் படுகொலை’ பாஜகவின் டிஎன்ஏவில் உள்ளது இந்து-முஸ்லீம் பதற்றத்தை அதிகரிக்கும் ‘விளையாட்டுத் திட்டம்’ என பிரகாஷ் காரத் குற்றச்சாட்டு
டைம்ஸ் ஆப் இந்தியா:
* “உத்தரகண்டில் செயல்படுத்தப்பட்ட பொது சிவில் சட்டம் (யு.சி.சி.) மாநிலத்தின் அதிகார வரம்பை பொறுத்தது. இருப்பினும், தேசிய அளவில், இதுபோன்ற உணர்வுபூர்வமான பிரச்சனைகளை அரசியல் ரீதியாக மட்டுமல்லாமல், வேற்றுமையில் ஒற்றுமை என்ற கண்ணோட்டத்திலும் பார்க்க வேண்டும்,” என்று ஜே.டி.(யு)வின் தலைமை செய்தித் தொடர்பாளர் நீரஜ் குமார் பேட்டி.
.- குடந்தை கருணா