சென்னை மாநகராட்சியில் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்றுதல் தொடர்பான புகார்கள் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை

Viduthalai
1 Min Read

தமிழ்நாடு

சென்னை,நவ.15- வட கிழக்கு பருவமழை கார ணமாக சென்னை மற் றும் அதன் புறநகர் பகுதி களில் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது.

வடகிழக்கு பருவ மழையின் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச் சேரி பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வரு கின்றது.

குறிப்பாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. மேலும் நாளையும் சென் னையில் மழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது. 

இதில் கூறப்பட்டுள்ளதாவது:

வடகிழக்குப் பருவ மழையை முன்னிட்டு சென்னை குடிநீர் வாரி யத்தின் சார்பில் பெரு நகர குடிநீர் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரை அகற்றுதல் தொடர்பான புகார் களை தெரிவிப்பதற்கு ஏதுவாக கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் இயங்கும்.

பொதுமக்கள் புகார் களை தெரிவிக்க 044-45674567 மற்றும் கட் டணமில்லா தொலை பேசி எண் 1916 ஆகிய எண்கள் மூலம் தொடர்பு கொண்டு குடிநீர் வழங் கல் மற்றும் கழிவுநீர் தொடர்பான புகார் களை தெரிவிக்கலாம்.

மேலும் 300 தூர் வாரும் இயந்திரங்கள், 66 அதிவேக கழிவுநீர் உறிஞ் சும் வாகனங்கள், 176 ஜெட்ராடிங் வாகனங் கள் என மொத்தம் 542 கழிவுநீரகற்றும் இயந்தி ரங்கள் கழிவுநீரகற்றும் பணிகளில் ஈடுபடுத்தப் படும். 15 மண்டலங்களுக் குட்பட்ட பகுதிகளில் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்றும் பணி களை 2,149 களப் பணியாளர்கள் மேற்கொள்வார்கள், என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *