பூமியை நோக்கி வரும் 2 சிறுகோள்கள் ஆபத்து இருக்கா?

Viduthalai
2 Min Read

நாசா கொடுத்த எச்சரிக்கை!

வாசிங்டன், ஜன.29 பூமிக்கு மிக நெருக்கமாக இரு மிகப் பெரிய ஆஸ்டிராய்டு எனப் படும் சிறுகோள்கள் வந்து கொண் டிருப்பதாக நாசா எச்சரிக்கை விடுத் துள்ளது. அந்த இரு சிறுகோள்களால் பூமிக்கு எந்த பிரச்சினையுமில்லை என்று நாசா கூறியிருப்பதால், அந்த சிறுகோள்கள் மீதான ஆர்வம் மக்களிடையே அதிகரித்துள்ளது.
நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகம் பூமிக்கு நெருக்கமாக செல்லும் விண்கற்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. அந்த வகையில் பூமியை நோக்கி இரு பெரிய ஆஸ்ட்ராய்டு எனப் படும் சிறுகோள்கள் வந்து கொண்டி ருக்கின்றன. இந்த 2 சிறுகோள்களில் ஒன்று 2025 பிஒய் 1 மற்றும் மற்றொன்றின் பெயர் 2025 பிஎஸ்2 ஆகும்.

ஆஸ்ட்ராய்டு 2025 பிஓய்–அய் பொறுத்தவரை ‘பேருந்து அளவு’ எனப்படும் 33 அடிகளை கொண்டதாகும். பூமியில் இருந்து 26 லட்சத்து 30 ஆயிரம் கிமீ தூரத்தில் பயணித்து கொண்டிருக்கிறது. இந்த சிறுகோள் மணிக்கு 26,789 கிமீ வேகத்தில் பயணிப்பதால், பூமிக்கு நெருக்கமாக நாளை இரவு 9.14 மணிக்கு வரும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
பூமிக்கும் சிறுகோளுக்கும் இடையிலான தூரம் அதிகமாகத் தெரிந்தாலும், பிரபஞ்ச அடிப் படையில் சிறிய அளவு தான். அதேபோல் ஆஸ்ட்ராய்டு பிஎஸ்2-அய் பொறுத்தவரை, 51 அடி கொண்டது. அதுமட்டுமல்லாமல் பூமியில் இருந்து 37 லட்சத்து 50 ஆயிரம் கிமீ தூரத்தில் இருந்து பயணித்து வரும் இந்த சிறுகோள், மணிக்கு 35,475 கிமீ வேகத்தில் வந்து கொண்டிருக்கிறது. இதனால் நாளை மதியம் 12.26 மணிக்கு பூமிக்கு நெருக்கமாக செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரு சிறுகோள்களும் பூமிக்கு நெருக்கமாக வந்தாலும், எந்தவொரு சிக்கலும், பிரச்சினையும் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பூமிக்கு அருகில் வரும் பொருட்களை ஆய்வு செய்து வரும் நாசாவின் முக்கிய அமைப்பு, டெலஸ்கோப் மற்றும் உயர்ரக ராடர்கள் மூலமாக சிறுகோள்களை உன்னிப்பாக கவனித்து வருகிறது.
இதன் மூலமாக சிறுகோள்களின் பயணம் மற்றும் பாதையையும் நாசா துல்லியமாக கணித்துள்ளது. ஏற்கனவே ஜனவரி மாதம் முதல் வாரத்திலேயே 2024 ஒய்.எப்.7 என்ற சிறுகோள் ஒன்று பூமிக்கு அருகில் பயணித்த போது, எந்த சிக்கலும் ஏற்படவில்லை. எனினும் சிறுகோள்களின் பயணம் குறித்த சம்பவம் மக்கள் மத்தியில் கவனத்தை திருப்பியுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *