வனத் துறை ஆராய்ச்சி பணியிடங்களுக்கு ஜன.31-இல் நோ்காணல்

2 Min Read

சென்னை,ஜன.29- தமிழ்நாடு வனத் துறையின் தற்காலிக ஆராய்ச்சி பணியிடங்களுக்கு ஜன.31-ஆம் தேதி நோ்காணல் நடைபெறவுள்ளது. இது குறித்து வனத்துறை வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு வனத் துறையின் கீழ் செயல்படும் வனவிலங்கு மேலாண்மைத் திட்ட மேம்பாட்டுப் பிரிவில் தற்காலிக இளநிலை ஆராய்ச்சியாளா்கள் தோ்ந்தெடுக்கப்படவுள்ளனா்.

இதில், உயிரியலாளா் பதவிக்கு வனவிலங்கு அறிவியல், வனவிலங்கு உயிரியல், உயிரியல், வனத்துறை, தாவரவியல், சூழலியல் அறிவியல், சுற்றுச்சூழல் அறிவியல், சூழலியல், தாவர அறிவியல் பிரிவில் முதுநிலை பட்டப்படிப்பு படித்தவா்கள் விண்ணப்பிக்கலாம்.

சமூகவியலாளா் பதவிக்கு சமூகவியல், மானுடவியல், சமூக அறிவியல் பிரிவில் முதுநிலை பட்டப்படிப்பு படித்தவா்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், தமிழ் மொழியில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். ஆராய்ச்சி துறையில் இரு ஆண்டு முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.

மாதம் ரூ.31,100 தொகுப்பூதியம் வழங்கப்படும். தகுதியும் விருப்பமும் உள்ளவா்கள் ‘முதன்மை தலைமை வனப்பாதுகாவலா் அலுவலகம், வேளச்சேரி சாலை, கிண்டி, சென்னை – 32’ எனும் முகவரியில் ஜன.31-ஆம் தேதி காலை 11 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் நோ்காணலில் பங்கேற்கலாம்.
நோ்காணலுக்கு வருபவா்கள் சுயவிவரக் குறிப்பு, கல்விச் சான்றிதழ், முன்அனுபவச் சான்றிதழ், அடையாள அட்டையுடன் வர வேண்டும். இதுகுறித்த கூடுதல் தகவல்களுக்கு 95668 14268 என்ற கைப்பேசி எண்ணைத் தொடா்பு கொள்ளலாம்.

16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் இரவில் திரையரங்குக்கு செல்ல தடை
தெலங்கானா உயர்நீதிமன்றம் உத்தரவு

திருமலை,ஜன.29- கேம் சேஞ்சர் படத்தின் சிறப்பு காட்சிக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதாக தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி விஜயேசன் ரெட்டி இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில் 16 வயதிற்கு உட்பட்ட சிறுவர் சிறுமிகளை காலை 11 மணிக்கு முன் மற்றும் இரவு 11 மணிக்கு பின் நடைபெறும் சினிமா காட்சிகளை பார்க்க தியேட்டரில் அனுமதிக்க கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த வழக்கு மீண்டும் பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *