சிங்கம்புணரி – ஒக்கூர் – திருபுவனத்தில் கழகப் பொதுக்கூட்டம் நடத்த முடிவு!
சிவகங்கை, ஜன.28 கடந்த 25.1.2025 சனிக்கிழமையன்று மாவட்ட கழக தலைவர் இரா.புகழேந்தி தலைமையில், மாவட்ட கழக செயலாளர் பெரு.இராசாராம் முன்னிலையில், கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் சிவகங்கை மாவட்டத்தில் வீடுதோறும் கழக குடும்பங்களை சந்திக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
காலை ஒன்பது மணிக்கு சிங்கம் புண ரியில் கழக பொறுப்பாளர்கள் தோழர்களுடன் சந்திப்பு தொடங்கி யது. மே 17 இயக்கத்தை சார்ந்த பா.பாண்டி யராஜ் உண்மை சந்தாவும், அமுமுக நகர செயலாளர் கண்ணன் விடுதலை சந்தாவும் வழங்கினார்கள்.
ஒன்றிய தலைவராக அழ. லெட்சுமணன், நகர கழகத் தலை வராக வே. இராசேந்திரன், நகர செயலாளராக கருணாநிதி, ஒன்றிய இளைஞரணி தலைவர் அ.பகலவன் நியமிக்கப்பட்டார்கள். 7.2.2025 அன்று சிங்கம்புணரியில் பொதுக்கூட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து வையகளத்தூரில் திராவிடர் கழக தொழிலாளர் அணி மாவட்டத் தலைவர் வைகை தமிழ்வாணன் இல்லத்தில் நடந்த சந்திப்பில் கிளைக் கழக தலைவராக வே .பாண்டி செல்வம், செயலாளராக ஈ.வெ. ரா.ம. கலைமணி, பகுத்தறிவாளர் கழக தலைவராக பாஸ்கரன் நியமிக்கப்பட்டார்கள் .
சுயமரியாதைச் சுடரொளி க.குமரேசன்
தொடர்ந்து வேலங்குடியில் சுய மரியாதைச் சுடரொளி க.குமரேசனின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
தொடர்ந்து திருப்பத்தூரில் 1929 ஆண்டு திறக்கப்பட்டது இன்றுவரை சிறப்பாக நடைபெற்றுவரும் வைக்கம் பதிப்பகத்தில் அதன் நிர்வாகி
எஸ்.அந்தோணி செயராஜ் அவர்க ளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து மதகுப்பட்டி சலு காபுரம் புலவர் என்று அழைக்கப்படும் பச்சமுத்து இல்லத்தில் அவரது, இணையர் நல்லம்மாள், மகள் மலர்க்கொடி ஆகியோர் ‘விடுதலை’ சந்தா வழங்கி மகிழ்ந்தார்கள் .
தொடர்ந்து ஒக்கூரில் கழக செயல் வீரர் சி.தேவேந்திரன் இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பில் ஒன்றிய திமுக துணைச் செயலாளர் சி .செல்வம், லெ.சோமசுந்தரம், ரா.ஆறுமுகம், ரவிபாண்டி, மணிகண்டன், ஆகியோர் வரவேற்றுஅனைவருக்கும் பயனாடை போர்த்தி, தமிழர் தலைவரின் தொண்டினை பெருமையுடன் கூறி மகிழ்ந்தார்கள்
மாணவர் கழக நிர்வாகிகள் நியமனம்!
சிவகங்கை ஒன்றிய மகளிர் பாசறை தலைவராக தெ.சரஸ்வதி ஒன்றிய மாண வர் கழகத் தலைவராக தெ.எடிசன், சிவகங்கை அரசு மகளிர் கல்லூரி தலைவராக தெ.மாயாவதி, ஒக்கூர் கிளைக் கழகத் தலைவர் தலைவராக கணேசன் ஆகியோர் நியமிக்கப்பட்டார்கள். 8.2.2024 அன்று ஒக்கூரில் பொதுக்கூட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இல்லத்திற்கு வருகைதந்த திமுக செயல்வீரர்களுக்கு தெய்வேந்திரன் அய்யாவின் அடிச்சுவட்டில் புத்தகம் வழங்கினார்.
கீழப்பூங்குடியில் மேனாள் ராணுவ வீரர் முருகேசன் இல்லத்தில்அவரது இணையர் செல்வி. மகள் மு.ஆதித்யா ஆகியோர் ‘உண்மை‘ சந்தா வழங்கி மகிழ்ந்தார்கள். மாணவப் பருவத்திலிருந்து கொள்கை வழி செயலாற்றும் முருகேசன் குடும் பத்திற்கு மாவட்டக் கழகம் சார்பில் பயனாடை போர்த்தி பாராட்டப்பட்டது.
தொடர்ந்து இலந்தங்குடி பட்டியில், மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் சு. செல்லமுத்து இல்லத்தில் அவரது இணையர் சாந்தி, மகன் பிடல் காஸ்ட்ரோ மருமகள் புனிதா ஆகியோர் விடுதலை சந்தா வழங்கினர்.
தொடர்ந்து கோவனூரில் நடைபெற்ற சந்திப்பில் வடசென்னை மாவட்ட திராவிட கழக செயலாளர் புரசை அன்புச் செல்வன் உறவினர் கள் கணேசன்- இராஜாத்தி, மு. கருப்பையா, சேவாத்தாள் – ஜெய ராமன், லட்சுமி -கண்ணன். மல்லிகா, பஞ்சு- முனியாண்டி, அழ கம்மாள் – பெருமாள், மீனாட்சி – துரை சிங்கம் ஆகியோர் குடும்பத்தோடு வரவேற்ற னர்.
பெரியார் திடலில் பணியாற்றி யதையும், தமிழர் தலைவர் ஆசிரியரின் தலைமையில் திருமணம் நடத்திக் கொண்டதையும் பெருமையோடு குறிப்பிட்டு மகிழ்ந்தார்கள்.
பெரியார் உலகத்திற்கு நன்கொடை!
சிவகங்கையில் கழகக் காப்பாளர் வழக்குரைஞர் ச.இன்பலாதன் பய னாடை போர்த்தி வரவேற்றார்.
இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பில் அவரது இணையர் – மருத்துவர் மலர்க்கண்ணி, மகன் மருத்துவர் இ.இராச ராசன், மருமகள் மருத்துவர் கலைவாணி ஆகியோர் அன்போடு வரவேற்றனர்.
‘‘பேத்திசெல்வி இனியா ரூ.5000/, பேரன் செல்வன் நிவன்ராஜசுந்தரம் ரூ.5000/ பெரியார் உலகத்திற்கு வழங்கி மகிழ்ந்தார்கள்.’’
தொடர்ந்து மானாமதுரை பெரியார் இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பில் தோழியர் மு புஷ்பவல்லி கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.
நகர கழகத் தலைவர் ச.வள்ளிநாய கம் ,மாவட்ட துணைச் செயலாளர் ச.அனந்தவேல் இருவரும் பெரியார் பிஞ்சு இதழுக்குச் சந்தா வழங்கி மகிழ்ந்தனர். சந்திப்பில் ஜெ. நாக ராஜன் பங்கு பெற்றார் .
திருபுவனத்தில்…
நிறைவாக திருபுவனத்தில் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் சு.இராசாங்கம் இல்லத்தில் அவரது இணையர் இரா.வெண்ணிலா,மகன் இரா.தமிழ்பிரபாகரன், தொ.ச. இராசேந்திரன் ஆகியோர் ‘விடுதலை’ சந்தா வழங்கினர். திருப்புவனத்தில் பொதுக்கூட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
அனைத்துக் கழக குடும்பங்களை யும் சந்தித்து ‘விடுதலை’, ‘உண்மை’, ‘பெரியார் பிஞ்சு’ இதழ்களுக்கு சந்தாக்கள் பெறும் வகையிலும், சிங்கம்புணரி, ஒக்கூர், திருபுவனம் ஆகிய ஊர்களில் பொதுக்கூட்டம் நடத்தவும், சந்திப்பு கூட்டங்களை ஏற்பாடு செய்து தந்த மாவட்டத் தலைவர் இரா.புகழேந்தி, மாவட்டச் செயலாளர் பெரு.இராசாராம் ஆகியோருக்கு மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு
இரா.குணசேகரன் பாராட்டும், நன்றியும் தெரிவித்துக்கொண்டார்.