‘இந்து தமிழ்’ ஏடு இன்று (28.1.2025) மேற்கண்ட கார்ட்டூனைப் போட்டுள்ளது.
அடிக்கடி திராவிடர் கழகத்தையும், தலைவரையும் தனக்கே உரித்தான பூணூல் புத்தியுடன் சீண்டுவது அதன் தொழிலாகவே இருந்துள்ளது.
வேங்கைவயல் பிரச்சினை குறித்து தமிழ்நாடு அரசு உரிய முறையில் தொழில் நுட்பங்களையெல்லாம் பயன்படுத்தி, குற்றப் பத்திரிகையை நீதிமன்றத்தில் காவல்துறை தாக்கல் செய்துள்ளது.
இதனை ஜாதிக் கலவரமாக்கி அரசியல் குளிர்காய சில சக்திகள் நாக்கை நீட்டிக் கொண்டிருந்தன.
அதற்குப் பயன்படவில்லையே என்ற ஆதங்கம் பிஜேபிக்கு இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
‘தமிழ் இந்து’க்கு என்ன வந்தது? ஜாதிக் கலவரமாக மாற வேண்டும் என்ற உள்ளக் கிடக்கையின் வெளிப்பாடா?
தந்தை பெரியார் பற்றி சீமானின் அண்டப் புளுகுகள் அம்பலமாகி விட்டன.
ஆதாரம் எங்கே என்றால் மழுப்புகிறார். சீமானின் அப்பட்டமான பொய்யை மட்டுமே முதலீடாகக் கொண்ட உளறல்களைக் கண்டு அவர் கட்சிக்காரர்களே ஆயிரக்கணக்கில் வெளியேறுகின்றனர்.
ஆனால் பூணூல் ‘தமிழ் இந்து’க்கு மட்டும், சீமான் பேச்சு சர்க்கரைப் பொங்கலாக இனிக்கிறதோ!
எத்தனையோ அவதூறுகளையும், வீண் பழிகளையும் கடந்து – உலகம் தழுவிய அளவில் தந்தை பெரியார் அவர்களின் தத்துவங்கள் சென்று கொண்டு இருக்கின்றன. 21 மொழிகளில் தமிழ்நாடு அரசு தந்தை பெரியாரின் நூல்களை மொழி பெயர்த்துள்ளது.
‘தமிழ் இந்து’ தன்னை அறியாமலேயே ‘பெரியாரை சீமான் திட்டியது’ – என்று ஒப்புக் கொண்டபின் – இப்படி ஒரு கார்ட்டூனா? அதுவும் மக்கள் கருத்தைக் கேட்கிறதாம்.
சிறுத்தை தன் புள்ளிகளை மாற்றிக் கொண்டாலும் பார்ப்பான் தன் பிறவிப் புத்தியை மா்றிக் கொள்ள மாட்டான் – டாக்டர் டி.எம். நாயர்.