தெற்கு ரயில்வேயின் வருவாய் ரூ.9,170 கோடி
2024-2025இல் தெற்கு ரயில்வே வருவாய் பாதுகாப்பு, நேரக் கட்டுப்பாடு போன்ற பல பணிகளில் வளர்ச்சியைக் கண்டுள்ளது. கடந்த 2024-2025ஆம் ஆண்டில் எங்கள் வருவாய் தொடர்ந்து வளர்ந்து ரூ.9,170 கோடி மொத்த வருவாயை ஈட்டி உள்ளது. இது முந்தைய ஆண்டை விட 5 சதவீதம் அதிகம் என தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்துள்ளார்.
நேரடி வரி வசூலிப்பதில் தமிழ்நாடு 4ஆவது இடம்
நாட்டின் வளர்ச்சிக்கு பொதுமக்கள் சிறப்பாக பங்களித்து வருகின்றனர். ஒன்றிய அரசுக்கு கிடைக்கும் வரி வருவாயில் 54 சதவீதம் வருமான வரித் துறையின் பங்களிப்பாக உள்ளது. நடப்பு நிதியாண்டில் ரூ.22.7 லட்சம் கோடி வருவாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என வருமான வரித்துறை தலைமை ஆணையர் ராஜசேகர் ரெட்டி லக்காடி தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் வங்கிக் கணக்குகளை சரிசெய்ய உத்தரவு
கல்வி உதவித் தொகை பெறவுள்ள பள்ளி மாணவர்களின் செயல்படாத வங்கிக் கணக்கு விவரங்களை சரிசெய்ய கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. உதவித் தொகை பெறுவதற்காக நிலுவையில் உள்ள மாணவர்களின் விவரங்கள் அடங்கிய பட்டியல் மற்றும் இந்திய தேசிய நிதி கழகத்தால் செயல்படாத வங்கிக் கணக்குகள் குறித்த தரவுகளும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதை ஒரு செயல் திட்டமாக உருவாக்கி நிலுவையில் உள்ள அனைத்து பட்டியலையும் துரிதமாக முடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.