டி.சி.எஸ்., எச்.சி.எல்., விப்ரோ, இன்ஃபோசிஸ் உள்ளிட்ட அய்.டி. நிறுவனங்கள் நடப்பு நிதியாண்டில், பல்வேறு எண்ணிக்கையில் ஆட் குறைப்பு செய்தது.
புதியவர்களுக்கும் வாய்ப்பு வழங்காமல் இருந்தது. ஆனால், 2026 நிதியாண்டில், அதிக எண்ணிக்கையிலான புதியவர்களை பணிக்கு அமர்த்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டி.சி.எஸ். – 40,000, எச்.சி.எல். – 7,000, விப்ரோ – 10,000 முதல் 20,000, இன்ஃபோசிஸ் – 20,000 பேரை பணிக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.