இந்தியாவில் ஒருவர் சராசரியாக ஒரு நாளைக்கு 422 நிமிடங்கள் (சராசரியாக 7 மணி நேரம்) வேலை செய்வது ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. அதன்படி வாரத்திற்கு 42 மணி நேரம் இந்தியர்கள் வேலை செய்கிறார்கள். சீனா, மலேசியா நாடுகளிலும் இதே நிலைதான். ஜெர்மன், சுவீடன் உள்ளிட்ட ஓஇசிடி (OECD) நாடுகளில் வாரம் 33 மணி நேரம் வேலை செய்கிறார்கள். இந்தியாவில் அதிகபட்சமாக குஜராத்தில் வாரம் 70 மணி நேரம் வேலை செய்வது தெரியவந்துள்ளது.