சென்னை, ஜூலை 17– எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.
கலந்தாய்வு வரும் 25ஆ-ம் தேதி தொடங்க உள்ளது. தமிழ்நாட்டில் அரசு, தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ளஅரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு 2023_20-24ஆ-ம் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு இணைய வழியில் விண்ணப்பிப்பது கடந்த ஜூன் 28ஆ-ம் தேதி தொடங்கி, கடந்த 12ஆ-ம் தேதி நிறைவடைந் தது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் ஆர்வத்து டன் விண்ணப்பித்தனர்.
அரசு இடங்களுக்கு 26,806 பேர் விண்ணப்பித்தனர். பரிசீல னைக்கு பிறகு, தகுதியான 9,680 மாணவர்கள், 16,176 மாணவிகள் எனமொத்தம் 25,856 பேரின் விண் ணப்பங்கள் ஏற்கப்பட்டன.
நிர்வாக ஒதுக்கீட்டு இடங்க ளுக்கு 13,394பேர் விண்ணப்பித் தனர். பரிசீலனைக்கு பிறகு, தகு தியான 4,752 மாணவர்கள், 8,427 மாணவிகள் என மொத்தம் 13,179 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப் பட்டன. அதேபோல, 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின்கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இடங் களுக்கு 3,042பேர் விண்ணப் பித்தனர்.
பரிசீலனைக்கு பிறகு, 901 மாண வர்கள்,2,092 மாணவிகள் என 2,993 விண்ணப்பங்கள் ஏற்கப் பட்டன. இந்நிலையில், எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு அரசு ஒதுக்கீடு, நிர்வாக ஒதுக்கீடு, 7.5 சதவீதஉள் இடஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசை பட்டி யல்களை சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிறப்பு மருத்துவ மனையில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (16.7.2023) வெளியிட்டார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு களுக்கான தரவரிசைப் பட்டியல் கள் www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org ஆகிய சுகாதாரத் துறை இணைய தளங் களில் பதிவேற்றம் செய்யப்பட் டுள்ளன. தமிழ்நாட்டில் அரசு, தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக் கீட்டுக்கு மொத்தம் 6,326 எம்பிபிஎஸ் இடங்கள் 1,768 பிடிஎஸ் இடங்கள் உள்ளன.
அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின்கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 473 எம்பிபிஎஸ் இடங்கள், 133 பிடிஎஸ் இடங்கள் இருக்கின்றன. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு.. 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின்கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 2020_-2021ஆ-ம் ஆண்டில் 435 இடங்கள், 2021_-2022ஆ-ம் ஆண் டில் 555 இடங்கள், 2022_20-23ஆம் ஆண்டில் 584 இடங்கள் கிடைத்த நிலையில், இந்த ஆண்டில் 606 ஆகஅதிகரித்துள்ளது.
தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் 1,509 எம்பிபிஎஸ் இடங்கள், 395 பிடிஎஸ் இடங்கள் உள்ளன.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு களுக்கான அகில இந்திய கலந் தாய்வு வரும் 20ஆம் தேதி தொடங்குவதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
ஒன்றிய, மாநில அரசுகள் ஒரே நேரத்தில் கலந்தாய்வு நடத்தினால், இரு இடங்களிலும் மாணவர்கள் பிளாக் செய்ய வாய்ப்பு உள்ளது. இதனால், கால விரயம் ஏற்படும். இதுபோன்ற சிக்கல்களை தவிர்க்க, ஒன்றிய அரசு 20ஆ-ம் தேதி கலந் தாய்வு தொடங்கினால், 5_-6 நாட் கள் இடைவெளிக்கு பிறகு, தமிழ கத்தில் 25ஆ-ம் தேதி கலந்தாய்வு தொடங்கப்படும்.
இணைய வழியில் மருத்துவக் கலந்தாய்வு நடைபெறும். சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கான கலந் தாய்வு கிண்டி கலைஞர் நூற் றாண்டு மருத்துவமனையில் நடத் தப்படும். சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை பெரிய அளவில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
அது மருத்துவமனையாகவே செயல்பட வேண்டும் என்பதில் முதலமைச்சர் உறுதியாக இருக் கிறார். இவ்வாறு அவர் கூறினார். சுகாதாரத் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, மருத்துவக் கல்வி, ஆராய்ச்சி இயக்குநர் சாந்திமலர், மருத்துவக் கல்வி தேர்வுக் குழு செயலர் ஆர்.முத்துச்செல்வன், கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை இயக்குநர் பார்த்த சாரதி உடன் இருந்தனர்.