கோரிக்கடவு, ஜன. 27- 26-01-2025 ஞாயிறு காலை 10 மணி மாலை 5.30 மணி வரை பழனி மாவட்டம் கோரிக்கடவு சமுதாய நலக்கூடம் அரங்கில் ஒரு நாள் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நடைபெற்றது. பழனி கழக மாவட்ட தலைவர் முருகன் தலைமையேற்று உரையாற்றினார் பழனி கழக மாவட்ட செயலாளர் பொன். அருண்குமார் தொடக்க உரையாற்றினார்
பழனி கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் திராவிடச் செல்வன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். தாராபுரம் கழக மாவட்ட காப்பாளர் புள்ளியான் பழனி மாவட்ட துணை தலைவர் ராமகிருஷ்ணன் பழனி மாவட்ட துணைச் செயலாளர் வழக்குரைஞர் ஆனந்தன் தாராபுரம் வழக்குரைஞர் சக்திவேல் பழனி ராதாகிருஷ்ணன், பெரியார் இரணியன், தாராபுரம் மாவட்ட துணை செயலாளர் மாயவன் ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றினர். திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சுஎன்னாரெசு பெரியார் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையை தொடங்கி வைத்து உரையாற்றினார்.
வகுப்பெடுத்தோர்
தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாறு என்ற தலைப்பில் பகுத்தறிவாளர்கழக ஊடகப் பிரிவு தலைவர் மா.அழகிரிசாமியும், பார்ப்பன பண்பாட்டு படையெடுப்பு என்ற தலைப்பில் கழகத் துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியாரும், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் சாதனைகள் என்ற தலைப்பில் எழுத்தாளர் வி.சி.வில்வமும், தந்தை பெரியாரின் பெண்ணுரிமை சிந்தனைகள் என்ற தலைப்பில் கழக துணை பொது செயலாளர் பிரின்சுஎன்னாரெசு பெரியாரும், மந்திரமா? தந்திரமா? அறிவியல் விளக்கம் என்ற தலைப்பில் ஈட்டி கணேசனும், பேய் ஆடுதல் சாமி ஆடுதல் அறிவியல் விளக்கம் என்ற தலைப்பில் மருத்துவர் கவுதமனும், சமூக நீதி வரலாறு என்ற தலைப்பில் முனைவர் வா.நேருவும் தொடர்ந்து வகுப்பு எடுத்தனர்.
ஆசிரியர் அவர்களின்
உரை காணொலியில்…
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் உரை காணொலியில் ஒளிபரப்பப்பட்டது. திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் பெரியாரியல் பயிற்ச்சிப்பட்டறை பொறுப்பாளர் இரா.ஜெயக்குமார் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை ஒருங்கிணைத்து நடத்தினார்.
நிறைவு விழா சான்றிதழ் வழங்குதல்
சிறப்பாக ஏற்பாடு செய்த கழகப் பொறுப்பாளர்களையும் பங்கேற்று பயன்பெற்ற மாணவர்களையும் பாராட்டி கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார் உரையாற்றினார். திண்டுக்கல் மாவட்ட தலைவர் இரா. வீரபாண்டியன் வாழ்த்துரை வழங்கினார்
பரிசு வழங்குதல்
வகுப்புகளை கவனித்து சிறப்பாக குறிப்புகள் எடுத்த செ.மதுசிறீ, அபிராமி, மதனசிறீ, சந்திரலேகா, சீதாலட்சுமி ஆகிய 5 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது அவர்களுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன.
பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்ட மொத்த மாணவர்கள் 67 ஆண்கள் 32 பெண்கள் 35 கல்லூரி மாணவர்கள் 10 பள்ளி மாணவர்கள் 57 வகுப்பு நடத்திய பேராசிரியர்களும் கழக பொறுப்பாளர்களும் பங்கேற்ற மாணவர்களும் குழுப் படம் எடுத்துக் கொண்டனர்
பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நடைபெறுவதையொட்டி சுவரொட்டிப் பிரச்சாரம் பிளக்ஸ் விளம்பரம் பரவலாக செய்யப்பட்டிருந்தன கழக கொடி கட்டப்பட்டு பட்டொளி வீசின. நகர செயலாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.
நிகழ்வில் பங்கேற்று சிறப்பித்தவர்கள்
மாவட்ட இளைஞரணிச் செயலாளர் ப.பாலன், திராவிட தொழிலாளரணி மாவட்டத் தலைவர் பெ.இரணியன், பழனி ஒன்றிய செயலாளர் சி.இராதாகிருட்டிணன், பழனி நகரத்தலைவர் சு.அழகர்சாமி, நகர இளைஞரணி செயலாளர் குண.அறிவழகன், மானூர் ராமலிங்கம். கோரிக்கடவு கருப்புச்சாமி, தாராபுரம் மாவட்டத் தலைவர் க.கிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் தம்பிபிரபாகரன், மானூர்.இராமலிங்கம், கோரிக்கடவு கொடியரசு, கோரிக்கடவு கன்னிமுத்து, எழுத்தாளர் வீ.அரிஸ்டாடில், இரா.சண்முகவேல், மாவட்ட து.தலைவர் ச.ஆறுமுகம், மா.து.செயலாளர் நா.மாயவன், கணியூர் கி.மயில்சாமி, ப.பரமசிவம், தி.வெங்கடாச்சலம், பு.முருகேசு, இரா.சின்னப்பதாசு, சா.சித்திக், மு.மாரிமுத்து, மு.மோகன், த.முருகேசன், க.வேலுமணி, ஆ.சேகர், அலங்கியம் உமாபுள்ளியான், சண்முகவள்ளிபரமசிவம், பழனி மகளிரணி காளீஸ்வரி, காட்டீஸ்வரி.