சென்னை, ஜூலை 17– ‘புதுவேதம்’ திரைப்பட பாடல் வெளியீட்டு விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் பேசியதாவது:-
திரைத்துறை வாயிலாக முற்போக்கு அரசியலை மக்க ளுக்கு சொல்ல வேண்டும். இந்தியாவில் வீடு இல்லாமல் பலகோடி பேர் இருக்கிறார்கள். இந்தியாவை வல்லரசாக்க போராடிக் கொண்டிருக்கிறோம். ஒவ்வொருவருக்கும் வீடு இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். லட்சக் கணக்கான மக்கள் நடைபாதைகளில் வாழ்கிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் மாற்றம் வரவேண்டும். எல் லோரும் சமமாக மதிக்கப்பட வேண்டும் என்பது தான் இடதுசாரி சிந்தனை. அந்த அரசியல் வலுப்பெற வேண்டும் என்றார்.