கருஞ்சட்டை
கமலஹாசனின் ‘விக்ரம்‘ திரைப்படத்தில் ஒரு நகைச்சுவைக் காட்சியில், அரசவை மதகுரு, விருந்தின் போது அனைவரது உண விலும் எச்சில் துப்பிய பிறகே –அனைவரும் உண்ணவேண்டும் என்று அந்தக் காட்சியை அமைத்திருப்பார்கள்.
அந்தத் திரைப்படம் வந்து 30 ஆண்டுகள் ஆகிவிட்டன.
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும் கும்பமேளாவில் நூற்றுக்க ணக்கான கூத்துகள் தொடர்ந்து நடை பெற்று வருகின்றன.
‘நிர்யோகி‘ என்று தன்னைத்தானே அழைத்துக்கொள்ளும் சாமியார் கூலிங் கிளாஸ் அணிந்துகொண்டு, குளிக்கப் போவோர் வரு வோர் மீது எச்சிலைத் துப்பிக்கொண்டே இருக்கிறார்.
‘பக்தி‘ என்ற பெயரில், இதனை யாரும் எதிர்த்துக் கேட்காமல், எச்சிலைத் துடைத்துக்கொண்டே சென்று விடுகிறன்றனர்.
‘‘கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி‘‘ என்று தந்தை பெரியார் சொன்னால் சீறும் சில்லரைகள், இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்களாம்?
திருப்பூர் அருகில் காரமடை என்ற ஊர். அவ்வூரில் உள்ள கோவில் விழாவில் நடக்கும் அருவருப்பைக் கேட்டாலே குமட்டிக் கொண்டு வரும்!
குழந்தைப் பேறு இல்லாத பெண் என்ன செய்யவேண்டுமாம்?
கோவில் பூசாரி வாயில் மென்று குதப்பும் வாழைப் பழத்தைக் குழந்தை பேறு இல்லாத பெண், பூசாரி வாயை, தனது வாயால் கவ்வி, அவர் மென்று குதப்பி வைத்திருக்கும் வாழைப் பழத்தை உள்வாங்கி, பய பக்தியோடு உண்ணுவது!
இது காட்டுமிராண்டித்தனம் இல்லையா? என்று ஒருமுறை முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் படத்துடன் ‘விடுதலை‘யில் வெளிவந்த செய்தியை, சட்டப்பேரவையில் விரித்துக் காட்டினார் என்பது கோடிட்டுக் காட்டவேண்டிய ஒன்று.
இப்பொழுது சொல்லுங்கள், ‘‘கடவுளை வணங்குபவன் …………….. யார்?’’