கருத்துக் கணிப்புக்கு கட்டுப்பாடு
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில், பிப்ரவரி 5, காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை ஓட்டுப் பதிவு நடைபெற உண்ணது. ஓட்டுப் பதிவுக்கு 48 மணி நேரத்திற்கு முன்பிருந்து, தேர்தல் கருத்துக் கணிப்புகளை வெளியிடக் கூடாது. தேர்தல் அன்று மாலை 6.30 மணி வரை, ஓட்டுப் பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை, அச்சு அல்லது மின்னணு ஊடகம் வழியாக வெளியிடக் கூடாது என தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
தற்காலிக பணியாளர்களுக்கு ஓய்வூதிய திட்டம்
தற்காலிகப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், உணவு, பொருள்கள் டெலிவரி, கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு பணியில் ஈடுபட்டுள்ள தற்காலிக பணியாளர்களுக்கு இ.பி.எஸ்., எனப்படும் பணியாளர் ஓய்வூதிய திட்டத்தை ஒன்றிய அரசு வடிவமைக்க, மூத்த அரசு அதிகாரி தலைமையில் கீழ் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. பணியாளர்கள் வேலை செய்வதை நிறுத்தியவுடன் அவர்கள் அணுகக் கூடிய ஓய்வூதிய சேமிப்பு வழிமுறைகளை உருவாக்குவதே, இ.பி.எஸ். திட்டத்தின் குறிக்கோள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.