திருச்செங்கோடு, ஜன. 26- நாமக்கல், திருச்செங்கோடு நானா நானி ஹோட்டல் பள்ளியில் 24-01-2025 அன்று மாலை 05.00 மணிக்கு சிறப்பாக நடைபெற்றது.
மாவட்ட இளைஞரணி தலைவர் ஆனந்தகுமார். கணேசன் அனைவரையும் வரவேற்று பேசினார்கள். மாவட்டத் தலைவர் ஆகு.குமார், மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் வை.பெரியசாமி, திருச்செங்கோடு நகர தலைவர் வெ.மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
மாநில இளைஞரணி செயலா ளர் நாத்திக.பொன்முடி தலைமை யேற்று நோக்க உரையாற்றினார் உரையில் நாமக்கல் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர், பகுதிகளில் திராவிடர் கழக அமைப்புகளை ஏற்படுத்துதல் தகவல் பதாகை அமைத்தல். இன்றைய காலகட்டத் தில் எவ்வளவு அவசியம் என்பதை இளைஞரணி தோழர்களுக்கு புரியும் வகையில் அவர் தன் சொந்த மாவட்டத்தில் நடை பெறும் இயக்க பணிகளை மேற் கோள்காட்டி மக்கள் மத்தியில் புதிதாக வரும் தோழர்கள் மத்தியில் அவர்களை இயக்கத்தின் பால் எவ்வாறு ஈர்ப்பது என பல்வேறு செய்திகளையும், பெரியார் விட்டுச் சென்ற பணிகளை வெகு சிறப்பாக உற்சாகமாக எடுத்துச் செல்லும் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் அயராத உழைப்பினையும் எடுத்துக் கூறினார். ஆக நம் நோக்கமெல்லாம் ஆசிரியர் சொல்வது போல் முதல் கட்டப் பிரச்சாரம் இரண்டாம் கட்டப் பிரச்சாரம் மூன்றாம் கட்டப்பிரச்சாரம், பிரச்சாரம் பிரச்சாரம் என சுற்றித் திரிய வேண்டும் என்று நோக்க உரையளித்தார்.
மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை.ஜெயராமன் கருத்துரை யாற்றினார். இயக்க செயல்பாடுகள் குறித்தும் விடுதலை சந்தா சேர்ப்பது குறித்தும் பெரியார் உலகத்திற்கு நிதி திரட்டுவது குறித்தும் கழகத் தோழர்களிடத்தில் புரியும்படி எடுத்துரைத்து சிறப்புரையாற்றினார்.
நிகழ்வில் சேலம் மாவட்ட தலைவர் வீரமணிராஜு, சேலம் மாவட்டச் செயலாளர் சி.பூபதி நாமக்கல் மாவட்ட கழக துணை செயலாளர் க.பொன்னுசாமி வெண்ணந்தூர் ஒன்றிய அமைப் பாளர் இலப.செல்வகுமார் பள்ளி பாளையம், ஒன்றிய அமைப்பாளர் மு.சீனிவாசன் குமாரபாளையம், நகர தலைவர் சு.சரவணன், ஆர்.ராஜேந்திரன் திருச்செங்கோடு நகர செயலாளர் முத்துக்குமார் திருச்செங்கோடு நகர இளைஞரணி தலைவர் நந்தகுமார், நகர இளைஞரணி செயலா ளர் பாரதிராஜா. ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
விடுதலை சந்தா
வழக்குரைஞர் வை.பெரியசாமி 1 ஆண்டு சந்தா மூன்று, மாவட்ட இளைஞரணி தலைவர் ஆனந்த குமார் கணேசன் 1 ஆண்டு சந்தா மூன்று, நிகழ்ச்சி நடத்தப்பட்ட நானா நானி ஓட்டல் உரிமையாளர் கார்த்திக் 1 ஆண்டு சந்தாவும், பள்ளிபாளையம் ஒன்றிய அமைப்பாளர் சீனிவாசன் அவர்கள் 1 ஆண்டு சந்தாவும், திருச்செங்கோடு நகரத் தலைவர் மோகன் 1 ஆண்டு சந்தாவும், மாவட்ட இளைஞரணி செயலாளர் சு.சேகர் 1 ஆண்டு சந்தாக்களை மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை.ஜெயராமன், மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி ஆகியோர்களிடம் சந்தை அளிக்கப்பட்டது.
அவர்கள் முன்னிலையில் திருச்செங்கோடு ராஜ்குமார் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார் மேலும் ஓராண்டு சந்தா ஒன்று வழங்குவது என அறிவித்தார். கலந்துரையாடல் கூட்டத்தில் 11 விடுதலைச் சந்தாக்கள் ஆண்டு சந்தாக்கள் தருவது என கூட்டத்திலேயே தோழர்கள் அறிவித்தார்கள். கூட்ட முடிவில் மாவட்ட இளைஞரணி செயலாளர் சு.சேகர் நன்றி கூறினார்கள்
தீர்மானங்கள்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மேனாள் தலைவரும், மேனாள் ஒன்றிய இணை அமைச்சரும், ஈரோடு சட்டமன்ற உறுப்பினரும், சுயமரியாதை வீரர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களின் மறைவிற்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலையும் வீர வணக்கத்தையும் தெரிவிக்கிறது.
நாமக்கல் மாவட்ட கழக இளைஞரணி சார்பாக நகரங்கள். ஒன்றியம் ஊராட்சி , பேரூராட்சி, கிளைக் கழகங்கள், முழுவதும் கழக இலட்சியக் கொடியை ஏற்றியும் புதிய கிளைக் கழகம் அமைத்து கழக இளைஞரணியை புதுப்பிப்பது என தீர்மானிக்கப்படுகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் கழக இளைஞரணி சார்பில் ஏராளமான இடங்களில் தகவல் பதாகை அமைத்தல், துண்டறிக்கை பிரச்சாரம் செய்தல், தெரு முனைப் பிரச்சாரம் செய்தல். பெரியார் பேசுகிறார் நிகழ்வினை தொடர்ச்சியாக நடத்துதல் என தீர்மானிக்கப்படுகிறது.
உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடான விடுதலை நாளேட்டை அனைவரிடமும் கொண்டு சேர்க்கும் விதமாக நாமக்கல் மாவட்ட கழக இளைஞரணி சார் பில் அதிக அளவில் சந்தாக்களை வழங்கிடவும். பெரியார் உலகத்திற்கு பெருமளவில் நிதி வழங்கிடவும் முடிவு செய்யப்படுகிறது.
பிப்ரவரி 15 ல் சிதம்பரத்தில் நடைபெற இருக்கும் தலைமை பொதுக்குழு கூட்டத்தில் நாமக்கல் மாவட்ட இளைஞரணி சார்பில் பெருமளவில் பங்கேற்று சிறப்பிப்பது என முடிவு செய்யப்படுகிறது.