பத்மநாபபுரம், ஜன. 26- கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் நகர கழகக் கலந்துரையாடல் கூட்டம் நேற்று (25.1.2025) காலை10.மணிக்கு தக்கலை தொமுச நலவாரிய அலுவலகத்தில் கழக மாவட்டத் தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது. கழக மாவட்டத் துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள் வரவேற்புரையாற்றினார். கழக கோட்டாறு பகுதி தலைவர் ச.ச. மணிமேகலை முன்னிலை வகித்தார்.
கழக எதிர்கால பிரச்சாரப் பணிகள், அமைப்புப் பணிகள், விடுதலை நாளிதழுக்கான சந்தா சேர்ப்பு, இயக்க வளர்ச்சிப் பணிகள் குறித்து கழக மாவட்ட கழக செயலாளர் கோ. வெற்றிவேந்தன் சிறப்புரையாற்றினார். அமைப்புசாரா தொமுச மாவட்டச் செயலாளர் சி.சுகுமாறன் கருத்துரையாற்றினார்.
கழக மாவட்டத் துணைச் செயலாளர் சி.அய்சக்நியூட்டன், இளைஞரணி செயலாளர் இரா.இராஜேஷ், டாக்டர் கலைச் செல்வன், தோழர்கள் ஜெசிந்தா, கனகபாய், ராஜன், பிரதீபன், டென்னிசன், பிரசன்ன மோகன், ராஜமணி, வில்சன் மற்றும் தொமுச நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். கழக காப்பாளர் ஞா.பிரான்சிஸ் நன்றி கூறினார். பத்மநாபபுரம் நகர கழகம் சார்பாக தக்கலை, மணலி,புலியூர்குறிச்சி ஆகிய இடங்களில் பிரச்சார கூட்டங்கள் நடத்துவது எனவும், விடுதலை நாளிதழுக்கு அதிக அளவிலான சந்தாக்களை சேர்ப்பது எனவும், தக்கலையில் நடைபெற்றுவரும் பேருந்து நிலைய பணிகளை உடனடியாக முடிக்க வேண்டுமென நகராட்சியைக் கேட்டுக்கொண்டும், பழுதடைந்த கன்னியாகுமரி களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலை, தக்கலை குலசேகரம் சாலை, முட்டம் தக்கலை சாலை, குளச்சல் குலசேகரம் சாலை ஆகிய சாலைகளை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென நெடுச்சாலைத்துறையைக் கேட்டுக்கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பத்மநாபபுரம் நகர கழக அமைப்பாளராக ஜாபினோ அறிவிக்கப்பட்டார்.