தென்காசி மாவட்ட கழக செயலாளர் கை.சண்முகத்தின் தாயார் கை.பாப்பா நேற்று (25.1.2025) காலை 8 மணியளவில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகி றோம்.
செய்தியறிந்து கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோர் கை.சண்முகத்திடம் கைப்பேசியில் தொடர்பு கொண்டு அம்மையாரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து ஆறுதல் கூறினர்.
அம்மையாரின் உடலுக்கு தென்காசி மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினர்.
நாளை (27.1.2025) காலை 8 மணியளவில் தென்காசி, வடகரை, 108, தைக்கால் தெருவில் இருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டு, தந்தை பெரியார் உடற்கொடை, குருதிக் கொடை இயக்கம் ஏற்பாட்டில் அம்மையாரது உடல் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் ஒப்படைக்கப்படும்.