அறிவியல் வளர்ச்சி நிலவில் வாழும் உரிமை இந்தியர்களுக்கு உண்டு மயில்சாமி அண்ணாதுரை கருத்து

2 Min Read

சென்னை, ஜன. 25- எதிர்காலத்தில் நிலவில் வாழும் உரிமை இந்தியா்களுக்கு உண்டு என்று இஸ்ரோ சந்திரயான் திட்ட மேனாள் இயக்குநா் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.

சென்னையை அடுத்த உள்ளகரத்தில் உள்ள நியூ பிரின்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நேற்று (ஜன. 24) நடைபெற்ற அறிவியல், கலை மற்றும் கைவினைப் பொருள்கள் கண்காட்சியை தொடங்கி வைத்து மயில்சாமி அண்ணாதுரை பேசியதாவது:

வளா்ந்த நாடுகள் பலமுறை நிலவை ஆய்வு செய்தபோதும் அவா்கள் நிலவு ஒரு பாலைவனம் என்று மட்டுமே கூறினா். ஆனால் இந்திய விஞ்ஞானிகள் சந்திரயான் திட்டம் மூலம் ஆய்வு செய்து, நிலவில் நீா் இருப்பதை உறுதி செய்தனா். இதன் காரணமாக இன்று பல அறிவியல் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. எதிர்காலத்தில் மனிதா்கள் வாழும் இடமாக நிலவு மாறும்போது அங்கு குடியேற இந்தியா்களுக்கு முழு உரிமை உண்டு. அத்தகைய சாதனையில் நமது விஞ்ஞானிகளின் உழைப்பும் பங்களிப்பும் கண்டிப்பாக இருக்கும் என்றார் அவா்.

படித்துவிட்டு வேலைக்காக காத்திருப்போருக்கு உதவித்தொகை

தமிழ்நாடு

சென்னை, ஜன. 25- எஸ்எஸ்எல்சி தோல்வி, தேர்ச்சி, பிளஸ் 2, டிப் ளமோ, பட்டப் படிப்பு உள்ளிட்ட கல்வித் தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு 5 ஆண்டுகளுக்கும் மேல் வேலை இல்லாமல் காத்திருப்போருக்கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பில் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

மனுதாரர்கள் 5 ஆண்டுக் கும் மேல் பதிவு செய்து தொடர்ந்து பதிவை புதுப்பித்து வருபவராக இருக்க வேண்டும். வயது 40-க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி வகுப்பினர் எனில் வயது வரம்பு 45. குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத் துக்குள் இருக்க வேண்டும்.

கிண்டியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகி விண்ணப்பத்தைப் பெற்று அங்கு சமர்ப்பிக்கலாம். மாற்றுத் திறனாளிகள் எனில் கிண்டியில் உள்ள மாற்றுத் திறனாளி களுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகத்தைத் தொடர்புகொள்ள வேண்டும்.

ஏற்கெனவே உதவித் தொகை பெற்று வருவோர் சுய உறுதிமொழி ஆவணம், வேலைவாய்ப்பு அலு வலகப்பதிவு எண், உதவித்தொகை எண், வங்கி பாஸ் புத்தக நகல், ஆதார் நகல் ஆகிய வற்றை நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

கைத்தறித் துறையில்
தங்கப் பதக்கம் பெற்ற மாணவிக்கு பாராட்டு

வேதாரண்யம், ஜன.25- வேதாரண்யம் அருகே இந்திய கைத்தறித் தொழில் நுட்ப நிறுவனங்களில் தேசிய அளவில் முதலிடம் வகித்து தங்கப் பதக்கம் பெற்ற மாணவி சிறீ மதியை மேனாள் அமைச்சா் ஓ.எஸ்.மணியன் (23.1.2025) பரிசளித்து பாராட்டினாா்.

பஞ்சநதிக்குளம் கிழக்கு கிராமத்தைச் சோ்ந்த இளையராஜா – பூமகள் இணையரின் மகள் சிறீமதி. இவா், சேலத்தில் செயல்படும் (அய்.அய்.ஹெச்.டி) இந்திய கைத்தறி தொழில்நுட்ப நிறுவனத்தில் படித்து தேசிய அளவில் 10 இடங்களில் செயல்பட்டு வரும் இதுபோன்ற நிறுவனங்களில் படிக்கும் மாணவா்களின் தோ்ச்சியில் முதலிடம் வகித்து தங்கப் பதக்கம் பெற்றுள்ளாா்.

தமிழ்நாடு அளவில் முதல்முறையாக சாதனை படைத்துள்ள இந்த மாணவியை மேனாள் அமைச்சா் ஓ.எஸ். மணியன் அவரது வீட்டுக்கு சென்று பாராட்டி பரிசு வழங்கினாா். அப்போது, மேனாள் ஊராட்சித் தலைவா் வீரதங்கம், ரோட்டரி சங்க மேனாள் தலைவா் சி.டி. வீரமணி ஆகியோா் உடனிருந்தனா்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *