சென்னை, ஜூலை 17- குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்குவதற்காக வரும் 20ஆ-ம் தேதி முதல் வீடு வீடாக டோக்கன், விண்ணப்பம் விநியோகம் செய்யப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ந.சுப்பை யன், சென்னை மண்டல கூடுதல் பதிவாளர், அனைத்து மண்டல இணைப் பதிவாளர்கள் மற்றும் பொது விநியோகத் திட்ட இணைப் பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு சட்டப் பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக ளிர் உரிமைத் தொகை திட்டம் மூலம் 1 கோடி குடும்பத் தலைவிக ளுக்கு, மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என அறிவித்தார். இதையடுத்து, மாதந் தோறும் குடும்பத் தலை விகளுக்கு `கலைஞர் மகளிர் உரி மைத் தொகை திட்டம்’ மூலம் ரூ.1,000 வழங்குவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் வழங் கப்பட்டுள்ளன.
2023_-2024ஆ-ம் நிதியாண்டில் இந்த திட்டத்தை செயல்படுத்திட ரூ.7,000 கோடிக்கு நிர்வாக அனு மதியும், நிதி ஒப்பளிப்பும் வழங்கி அரசால் ஆணையிடப்பட்டுள் ளது.
இந்நிலையில், இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு கூட்டுறவுத் துறையால் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து அர சாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்த திட்டத்தில் வரு வாய் மற்றும் பேரிடர் மேலாண் மைத் துறையுடன், ஒருங்கிணைப் புத் துறையாக கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயல்படும். தலைமைச் செயலர் தலைமையில் இந்த திட்டத்தை மாநில அளவில் கண்காணிக்கவும், ஒருங்கிணைக்கவும் மாநில கண் காணிப்புக் குழு அமைக்கப்பட் டுள்ளது.
மாவட்ட ஆட்சியர்கள், இந்த திட்ட செயல்பாடுகளைத் திட்ட மிடுதல், ஒருங்கிணைத்தல் மற்றும் செயல்படுத்துதல் பணிகளை மேற் கொள்வர். சென்னை மாநகராட் சிப் பகுதியில், மாநகராட்சி ஆணையர் இந்த திட்டத்தைச் செயல்படுத்தும் அலுவலராக இருப்பார்.
ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட மற்றும் வட்ட அளவி லான குழுக்களை மாவட்ட ஆட் சியர் அமைக்க வேண்டும். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத் தில் பயன்பெறுவதற்கான விண் ணப்பங்கள் அரசால் அச்சடிக்கப் பட்டு, மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். மண்டல இணைப் பதிவாளர்கள், மாவட்ட ஆட்சியருடன் ஒருங்கிணைந்து, டோக்கன்கள் மற்றும் விண்ணப் பங்களைப் பெற்று, அவை நியாய விலைக் கடைப் பணியாளர்களிடம் உரிய காலத்தில் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்.
இந்த விண்ணப்பங்களில் குடு ம்ப அட்டை எண் மற்றும் பயனா ளிகள் முகாம்களுக்கு வருகைபுரிய வேண்டிய தேதி மற்றும் நேரம் ஆகியவற்றை குறித்து, நிர்ணயிக் கப்பட்ட கால அட்டவணைப்படி நியாய விலைக் கடை பணியா ளர்கள் வீடுகளுக்கு சென்று வழங்க வேண்டும்.
விண்ணப்பப் பதிவு முகாம் காலை 9.30 முதல் பகல் 1 மணி வரையும், பிற்பகல் 2 முதல் மாலை 5.30 மணி வரையும் நடத்தப்படும். ஒரு குடும்பத்துக்கு வழங்கப்பட்ட விண்ணப்பத்தை, வேறு குடும்பத் தினர் பயன்படுத்தக் கூடாது. பொது விநியோகத் திட்டத்தில் உணவுப் பங்கீட்டுப் பொருட்களை வாங்காத அட்டை தாரர்களுக்கு, விண்ணப்பங்களை வழங்கத் தேவையில்லை. அவர்கள் விருப்பப்பட்டால், நேரடியாக வந்து விண்ணப்பிக் கலாம்.
எந்தக் காரணத்தைக் கொண் டும், நியாய விலைக் கடைகளுக்குத் தொடர்பு இல்லாத நபர்களை இந்தப் பணியில் ஈடுபடுத்தக் கூடாது. முகாம் நடக்கும் இடம் குறித்து நியாய விலைக் கடைகளில் தமிழில் தகவல் பலகை அமைக்க வேண்டும்.
வரும் 20ஆ-ம் தேதி முதல் நியாய விலைக் கடை பணியாளர் கள் டோக்கன் மற்றும் விண்ணப் பப் படிவங்களை குடும்ப அட்டை தாரர்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.