டூப்ளிகேட் போட்டோவை எடிட் செய்து வெளியிட்டவர்தான் சீமான் என, அமைச்சர் க.பொன்முடி விமர்சித்துள்ளார். தன்னுடைய செய்தி வர வேண்டும் என்பதற்காக, பெரியார் குறித்து சீமான் அவதூறாக பேசி வருவதாகக் கண்டனம் தெரிவித்த அவர், பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் நடக்கும் ஆட்சிதான் இந்த திராவிட மாடல் என்றும் தெரிவித்தார். மேலும், திராவிட மாடல் ஆட்சியை யாராலும் தொட்டுப் பார்க்க முடியாது எனவும் அவர் சவால் விடுத்தார்.