சீர்காழி, ஜூலை 17– மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 15.7.2023 சனிக்கிழமை மாலை 6 மணியளவில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு மற்றும் கலைஞர் நூற்றாண்டு தொடக்கவிழா பொதுக்கூட்டம் வெகு சிறப் பாக நடைபெற்றது.
வைக்கம் போராட்ட நூற்றாண்டு மற்றும் கலைஞர் நூற்றாண்டு விழாக்கள் திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழ்நாடு முழுதும் கொண்டாடப்படும் என ஈரோட்டில் நடை பெற்ற பொதுக்குழுவில் தீர்மானம் நிறை வேற்றப் பட்டதையடுத்து மயிலாடுதுறை மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில், அனைத்து ஒன்றியங்களிலும் வைக்கம் போராட்ட நூற்றாண்டு மற்றும் கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழாவினை வாரந் தோறும் தொடர்ச்சியாக சனிக்கிழமைகளில் நடத்துவது என திட்டமிடப்பட்டது.
மாவட்ட தலைவர் கடவாசல் குணசேக ரன், செயலாளர் கி.தளபதிராஜ் ஆகியோர் மாவட்டம் முழுதும் கழகப் பொறுப்பாளர்கள், தோழமை இயக்கத்தினர், திராவிட இன உணர்வாளர்களை நேரில் சந்தித்து விழா விற்கான முன்னேற்பாடுகளை செய்தனர். வாராவாரம் பொதுக்கூட்டமா? என தோழர் கள் முதலில் சற்று அதிசயப்பட்டாலும் நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் ‘நம்மால் முடியும்!’ என்ற தமிழர் தலைவரின் மந்திரச்சொல்லுக்கு ஆட்பட்டு தேனீக்களாய் களத்தில் இறங்கி செயல்பட்டனர்.
17.6.2023 அன்று மயிலாடுறையில் நடை பெற்ற விழாவில் திராவிடர் கழக துணைப் பொதுச்செயலாளர் வழக்குரைஞர் சே.மெ. மதிவதனியும், 24.6.2023 அன்று கொள்ளிடத் தில் நடைபெற்ற விழாவில் கழக பேச்சாளர் இராம.அன்பழகனும், 1.7.2023 அன்று செம் பனார்கோயிலில் நடைபெற்ற விழாவில் கழக பேச்சாளர் தஞ்சை இரா.பெரியார் செல்வனும், 8.7.2023 அன்று நடைபெற்ற விழாவில் திராவிடர் கழக துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியாரும் கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினர்.
நிறைவாக சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகில் 15-07-2023 அன்று மாலை 6 மணியளவில் நடைபெற்ற வைக்கம் போராட்ட நூற்றாண்டு மற்றும் கலைஞர் நூற்றாண்டு தொடக்கவிழா பொதுக்கூட்டம் வழக்கம்போல் அன்பு-அருள் சங்கமம் குழுவினரின் பெரியார் இசை நிகழ்ச்சியோடு தொடங்கியது. அன்பு, அருள்தாஸ் மற்றும் ஷரியா ஈஷாக் ஆகியோர் இயக்கப் பாடல் களைப் பாடி பொது மக்களின் பாராட்டைப் பெற்றனர்.
சீர்காழி ஒன்றியத் தலைவர் ச.சந்திர சேகரன் அனைவரையும் வரவேற்க, நிகழ்ச் சிக்குத் தலைமையேற்ற கழக மாவட்ட மகளிர் அணி செயலாளர் ச.தமிழ்மணி தனது முதல் பேச்சிலேயே பார்வையாளர்களின் கைத்தட்டலைப் பெற்றார்.
மாவட்ட அமைப்பாளர் ஞான.வள்ளு வன், மாவட்ட துணைச் செயலாளர் அரங்க.நாகரெத்தினம், சீர்காழி பகுத்தறிவாளர் கழகத் தலைவர் கோ.சட்டநாதன், சீர்காழி நகரத் தலைவர் க.சபாபதி, கொள்ளிடம் ஒன்றியத் தலைவர் பி. பாண்டியன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயலாளர் கி.தளபதிராஜ் அறி முக உரையாற்றி நிகழ்ச்சியை ஒருங்கிணைத் தார். அவர் தனது உரையில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு, கலைஞர் நூற்றாண்டு தொடக்கவிழா சீர்காழியில் கொண்டாடப் படும் இந்த நாள் பச்சைத்தமிழர் காமராஜர் அவர்களுடைய பிறந்தநாளாகவும் அமைந் தது கூடுதல் சிறப்பு. இது முப்பெரும் விழா வாக நடைபெறும் என்றார்.
சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட திராவிட முன்னேற்ற கழக நகர செயலாளர் தம்பி ம.சுப்பராயன், சீர்காழி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் எ.ஜி.ஜே. பிரபாகரன், சீர்காழி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் பஞ்சு.குமார் மற்றும் சீர்காழி நகர் மன்றத் தலைவர் திருமதி ராஜ.துர்காபரமேசு வரி ஆகியோர் உரையாற்றியதைத் தொடர்ந்து கழக மாவட்டத் தலைவர் கடவாசல் குண சேகரன் உரையாற்றினார்.
அவர் தனது உரையில், கேரள மாநிலம் வைக்கத்தில் முதலமைச்சர் பினராயி விஜ யன் அவர்களால் கொண்டாடப்பட்ட வைக் கம் போராட்ட நூற்றாண்டு தொடக்க விழா வில் கழகத் தோழர்களுடன் கலந்து கொண்ட அனுபவத்தையும், பெரியார் களம் கண்ட இடங்கள் சிறைச்சாலைகள் போன்றவற்றை நேரில் கண்ட அனுபவத்தையும் உணர்ச்சி பொங்க எடுத்துரைத்தார்.
இறுதியாக திராவிடர் கழகத் துணைப் பொதுச்செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக நீண்டதொரு சிறப்புரையை நிகழ்த் தினார்.
இரு நூற்றாண்டு விழாக்கள் கொண் டாடப்படும் இந்த நிகழ்வு தந்தை பெரியாரால் பச்சைத் தமிழர் என்றும் தமிழர்களின் இரட்சகர் என்றும் போற்றி அடையாளம் காணப்பட்ட கல்வி வள்ளல் காமராசரின் பிறந்தநாளையும் இணைத்து மூன்று சிறப் பான விழாக்களாக ஏற்பாடாகி உள்ளது.
நான் வரும் வழியில் சில இடங்களில் பிஜேபி கொடி வைக்கப் பட்டிருந்ததைப் பார்த்து விசாரித்தபோது காமராஜர் பிறந்த நாளுக்காக வைத்திருக்கிறார்கள் என்று சொன்னார்கள். எனக்கு ஒரு புறம் சிரிப்பு வந்தாலும் ஆத்திரமும் வந்தது. காமராஜரை கொலை செய்ய முயற்சித்த கூட்டம் காமராஜர் பிறந்தநாளுக்கு கொடி கட்டுவதா எனக்கேட்டு ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க பரிவாரங் களின் ஆக்டோபஸ் அழிவு வேலைகளை தோலுரித்தார். காமராஜரை கொண்டாடுவதற் கான தார்மீக உரிமை தங்களுக்கு இருப்ப தற்கான ஒரேயொரு காரணத்தையாவது அவர்களால் சொல்ல முடியுமா என்று அறைகூவல் விடுத்தபோது கூட்டத்தாரின் கரவொலி நிற்க நீண்ட நேரமாயிற்று.
ஒடுக்கப்பட்டோருக்கு அரசுப் பணியில் இடஒதுக்கீடு ஆணை பிறப்பித்த நீதிக்கட்சி அமைச்சர் முத்தையா முதலியார் பிறந்த ஊர் என்ற பெருமைக்குரியது சீர்காழி! தமிழர்களின் சூத்திரப்பட்டம் ஒழிய, இன இழிவு நீங்க தந்தை பெரியார் நடத்திய சட்ட எரிப்புப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டு சிறைசென்ற பெருமைக்குரியது! என்றார்.
சுயமரியாதை இயக்கம் தோற்றுவித்த நாள்முதல் தந்தை பெரியார் நிறைவேற்றிய சமூக நீதி, பெண்ணுரிமை சார்ந்த அனைத்து தீர்மானங்களையும் தன் ஆட்சி காலத்தில் சட்டங்களாகவும் ஆணைகளாகவும் நிறை வேற்றி “திராவிட மாடல்“ ஆட்சியின் நாயக ராகத் திகழ்ந்தவர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் என்று பட்டியலிட்டுக்காட்டி அதனை சற்றும் வழுவாமல் காத்து, இந்திய ஒன்றியத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் தேவையானது திராவிட மாடலே என்றும், இந்த நிலை தொடரவும் மீண்டும் தமிழ்நாடு சனாதன இந்துத்துவத்திற்கு அடிமையாகி விடாமல் பெற்ற உரிமைகளைப் பாதுகாக்க வேண்டுமென்றால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியை வெற்றி பெறச்செய்து பிஜேபி அற்ற இந்தியாவை உருவாக்குவது ஒன்றே வழி என்று பேசினார்.
போடப்பட்ட இருக்கைகள் நிரம்பி வழிந்து உட்கார இடமின்றி ஆண்களும் பெண்களும் இளைஞர்களுமாக பலர் தொலைதூரம் வரையிலும் நின்று இறுதிவரை சே.மெ.மதிவதனியின் பேச்சை செவிமடுத்த வர்கள் மிகுந்த உற்சாகத்துடன் மேடையேறி பாராட்டி ஒளிப்படமெடுத்துக்கொண்டது உணர்ச்சி மயமாக இருந்தது. சீர்காழி ஒன்றிய செயலாளர் எஸ்.பி.செல்வம் நன்றி கூறினார்.
கழக மாவட்ட மகளிரணித் தலைவர் கோமதி செல்வம், மயிலாடுதுறை நகரத் தலைவர் சீனி.முத்து, செயலாளர் பூ.சி.காம ராஜ், மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப் பாளர் அ.சாமிதுரை, கொள்ளிடம் ஒன்றியச் செயலாளர் பூ.பாண்டுரங்கன், மாவட்ட இளைஞரணி தலைவர் க.அருள்தாஸ், குத்தாலம் ஒன்றிய செயலாளர் தி.சபாபதி, வைத்தீஸ்வரன்கோயில் கழகத் தலைவர் வி.ஆர்.முத்தையன், திமுக மாவட்ட பிரதிநிதி இரா. கமலநாதன் மயிலாடுதுறை நகர துணைத்தலைவர் இரெ.புத்தன், ப.க தலைவர் சித்தர்க்காடு க.செல்வராஜ், விஜயா செல்வ ராஜ், தங்க.செல்வராஜ், கொள்ளிடம் பகுத்தறி வாளர் கழக தலைவர் ஆசிரியர் கோ.இளங் கோவன், சீர்காழி ப.க செயலாளர் கவிஞர் வெண்மணி, சீர்காழி பெல் ஆர்ட்ஸ் மணி, செம்மலர் வீரசேனன் மற்றும் ஏராளமான திராவிடர் கழக, திராவிட முன்னேற்ற கழக, தோழமை இயக்க தோழர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.