நீட்டிப்பு இல்லை
வருமான வரி தாக்கலுக்கு கடைசி நாளான வருகிற 31ஆம் தேதி என்ற காலக்கெடுவை நீட்டிக்கும் திட்டம் எதுவும் ஒன்றிய அரசிடம் இல்லை என வருவாய் செயலாளர் உறுதிபட தெரிவித்துள்ளார்.
வெகுமதி
சாலை விபத்துகளில் சிக்குபவர்களின் உயிரைக் காப்பாற்றுவோருக்கு ரூ.10,000 வெகுமதி அளிப்பதற் கான ஆணையை தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ளது.
கொள்முதல்
முன் எச்சரிக்கை நடவடிககையாக 3 லட்சம் டன் வெங்காயத்தை ஒன்றிய அரசு கொள்முதல் செய்துள்ளது. ஒரு வேளை வெங்காயத்தின் விலை உயரும் பட்சத்தில் தேவைகளை பூர்த்தி செய்ய விலை நிலைப்படுத்தல் நிதியின் கீழ் இந்த கையிருப்பு வெங்காயம் பயன்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தேக்கம்!
ஈரோட்டில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் 4ஆவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ரூ.300 கோடி பொருள்கள் தேக்கம்.
செவிலியர் கல்வி
25 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 2060 டிப்ளமோ நர்சிங் படிப்புக்கும், 24 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 720 பார்ம் டி படிப்புக்கும் www.tnhealth.tn.gov.in, www.tnmedicalseletion.org என்ற இணையதளங்கள் வாயிலாக இன்று (17.6.2023) காலை 10 மணி முதல் வருகிற 26.7.2023 அன்று மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
உயர்த்தல்…
சந்திரயான்-3 விண்கலத்தின் நிலவை நோக்கிய பயணத்தில் முதல்முறையாக அதன் சுற்றுப்பாதை வெற்றிகரமாக உயர்த்தப்பட்டது.
சுற்றுலா ரயில்
நீராவி என்ஜின் வடிவிலான சுற்றுலா ரயில் சென்னை எழும்பூர்-புதுச்சேரி இடையே நேற்று (16.7.2023) சோதனை ஓட்டம் நடத்தி பார்க்கப்பட்டது.
நிறுத்தம்
மகளிர் உரிமைத் திட்டத்துக்கான விண்ணப்ப பணிகள் நடைபெறும் நிலையில், எங்கு வேண்டு மானாலும் அத்தியாவசியப் பொருள்கள் வாங்கிக் கொள்ளும் ‘ஒரே நாடு ஒரே குடும்ப அட்டைத் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.